[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

கபாலி வசனத்தை கலக்கலாக பேசிய ஜப்பான் ரசிகர்

kabali-movie-japan-fans

கபாலி திரைப்படத்தின் முதல் காட்சியைப் பார்ப்பதற்காக ஜப்பானில் இருந்து வந்த ரசிகர்களால் சென்னை திரையரங்குகள் களைகட்டின.

ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படத்தின் ஜூரம் தமிழகத்தை மட்டுமல்ல அமெரிக்கா, மலேசியா, கனடா என தமிழர் வாழும் தேசமெங்கும் தொற்றிக் கொண்டிருக்கிறது...

இவர்களாவது பரவாயில்லை... ஜப்பானில் உள்ள ரஜினி ரசிகர்கள் சென்னைக்கே படையெடுத்து வந்து தியேட்டர்களில் கபாலியை பார்க்க கூடியதுதான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை காசி தியேட்டரில் கபாலி படத்தின் முதல் காட்சியைப் பார்க்க வந்த ஜப்பானைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள் கூறுகையில், கபாலி படம் பார்ப்பதற்காக ஜப்பானில் இருந்து வந்துள்ளோம்.. ரொம்ப சந்தோசம்.. ரொம்ப மகிழ்ச்சி.. ஜப்பானில் ரஜினி ரசிகர் மன்றத்தில் 500-க்கும் அதிகமானோர் இருக்கிறோம் என தெரிவித்தார். மேலும் கபாலி படத்தில் ரஜினி பேசும் முக்கிய வசமான மகிழ்ச்சி, கபாலிடா போன்ற வசனங்களை கலக்கலமாக பேசி ஜப்பான் ரசிகர் அசத்தினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:

[X] Close