[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா
  • BREAKING-NEWS காஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS மக்களை சந்திக்க திமுக என்றுமே அஞ்சியதில்லை; நாங்கள் ஓடி ஒளியவும் இல்லை; மக்களை சந்திக்க திமுக எப்போதும் தயாராக உள்ளது - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS குடியுரிமை சட்ட மசோதா இஸ்லாமியர்கள் உள்ளிட்ட எந்த சிறுபான்மையினருக்கும் எதிரானதல்ல - அமித்ஷா
  • BREAKING-NEWS வெளிநாட்டு இஸ்லாமியர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற வேறு சில சட்ட வாய்ப்புகள் உள்ளன - அமித்ஷா

அஜித் பட இயக்குநர்; ஹாரிஸ் இசை - படப்பிடிப்பை தொடங்கிய 'சரவணா ஸ்டோர்ஸ்' சரவணன்!

legend-saravana-stores-saravanan-s-first-feature-film-launched-officially

சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது

சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் அருள், ஹீரோவாக அறிமுகமாகிறார். அந்த நிறுவனத்தில் விளம்பரப் படங்களில் விதவிதமாக வந்த அவர் வெள்ளித் திரையில் வருகிறார். அவர் நடித்த விளம்பர படங்களை இயக்கிய, இரட்டை இயக்குனர் களான ஜேடி-ஜெர்ரி இயக்குகின்றனர்.

இவர்கள் ஏற்கனவே, விக்ரம், அஜீத் நடித்த ’உல்லாசம்’, விக்ரமாதித்யா, ஷெரின் நடித்த ’விசில்’ படங்களை இயக்கியவர்கள்.  இந்தப்படத்தில் கதாநாயகியாக வட இந்திய மாடல் ஒருவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இப்போது இவர்கள் இயக்கும் படம் பேண்டஸி கதையை கொண்டது என்று கூறப்படும் நிலையில், இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். ஹீரோவாக நடிக்கும் சரவணனே படத்தை தயாரிக்கிறார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது. இந்த விழாவில் நடிகர் விவேக், பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close