பாதுகாப்பு கோரி நடிகை காயத்ரி ரகுராம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்து மதத்தை விமர்சித்ததாக திருமாவளவன் பற்றி நடிகை காயத்ரி ட்விட்டரில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை பதிவிட்டிருந்தார். இதன் காரணமாக அவரது வீட்டை முற்றுகையிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகைப் போராட்டம் நடத்தியிருந்தனர்.
இந்நிலையில், பாதுகாப்பு கோரி நடிகை காயத்ரி ரகுராம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சிலர், தொலைபேசி மூலம் தொடர்ந்து மிரட்டல் விடுப்பதாகவும், எனவே தனது இல்லத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனுவில் அவர் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
அசாம் மக்கள் ஏன் இப்படி கொந்தளிக்கிறார்கள்? - வரலாற்று காரணம் இதுதான்..!
‘சென்னை ஹோட்டல் ஊழியரை கண்டுபிடிக்க உதவுங்கள்’- தமிழில் வேண்டுகோள் விடுத்த சச்சின்
பாலியல் குற்றங்களுக்கு சினிமாவில் பெண்களை சித்தரிக்கும் விதமும் காரணமே - கனிமொழி
டி20 உலகக் கோப்பையில் தோனி களமிறங்குவார் - பிராவோ நம்பிக்கை
“கலப்பட டீ தூள், காலாவதியான குளிர்பானங்கள்” - திடீர் சோதனையில் சிக்கிய உணவுப் பொருட்கள்