ராஜமவுலி இயக்கி வரும் ’ஆர்ஆர்ஆர்’ படத்தில் 3 ஹாலிவுட் நட்சத்திரங்கள் நடிக்கின்றனர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'பாகுபலி'-க்குப் பிறகு ராஜமவுலி இயக்கும் படத்தில், தெலுங்கு சினிமாவின் டாப் ஹீரோக்களான ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா இணைந்து நடிக்கின்றனர். தற்காலிகமாக ’ஆர்ஆர்ஆர்’ (RRR ) என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படம், 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. இதன் கதை, சுதந்திர போராட்ட வீரர்களான அல்லுரி சித்ராமஜூ, கொமரம் பீம் ஆகியோர் வாழ்க்கையைத் தழுவி எழுதப்பட்டுள்ளது. ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் கதையை எழுதியுள்ளார்.
பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ஆலியா பட் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். படம் அடுத்த ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி, வெளியாக இருக்கிறது.
இந்தப் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்த பிரிட்டீஸ் நடிகை, டெய்சி எட்கர் ஜோன்ஸ் திடீரென விலகினார். அவருக்குப் பதிலாக வேறு நடிகையை தேடி வந்தனர். யாரும் செட் ஆகாததால் அந்த கேரக்டரை கைவிட்டு விட்டதாக டோலிவுட்டில் செய்தி வெளியானது.
(ஜூனியர் என்.டி.ஆர், டெய்சி எட்கர் ஜோன்ஸ்)
இந்நிலையில் அதை மறுக்கும் விதமாக, இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஹாலிவுட் நடிகை ஒலிவியா மோரிஸ், ஜெனிஃபர் என்ற கேரக்டரில் நடிக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஜூனியர் என்.டி.ஆர் ஜோடியாக நடிக்கிறார்.
மேலும் ’தோர்’, ’கிங் ஆர்தர்’ உட்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள ரேய் ஸ்டீவன்சன், ஜேம்ஸ்பாண்ட் படமான ’எ வியூ டு கில்’, ’இண்டியானா ஜோன்ஸ்’, ‘த லாஸ்ட் குருசேட்’ உட்பட பல படங்களில் நடித்துள்ள ஐரிஸ் நடிகை அலிசான் டூடி ஆகியோரும் இந்தப் படத்துக்காக ஒப்பந்தமாகியுள்ளனர்.
குடியுரிமை திருத்த மசோதா நகலை மக்களவையில் கிழித்த ஓவைசி
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
ஊராட்சித் தலைவர் பதவி ஏலம்? - மாவட்ட ஆட்சியர் விளக்கம்
நித்தியானந்தா எங்கு இருக்கிறார்? - அரசுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி
‘கேக் வேண்டாம் வெங்காய பை கொடுங்க’ - சோனியா காந்தி பிறந்தநாள் விழாவில் விநோதம்
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..!
தாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்ஷன்: மனங்களை வென்ற வீடியோ!
பெண்களுக்கு என்ன கற்றுக்கொடுக்க வேண்டும்?: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற பெண்ணின் அசத்தல் பதில்!