’மூக்குத்தி அம்மன்’ படத்திற்காக நடிகை நயன்தாரா விரதம் இருக்க உள்ளதாக நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.
காமெடி நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கி, நடிக்கும் படம், ‘மூக்குத்தி அம்மன்’. இதில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிக்கும் இது பக்தி படம். இதனால் படக்குழு அனைவரும் சைவத்துக்கு மாற வேண்டும் என்று ஆர்.ஜே.பாலாஜி கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆர்.ஜே.பாலாஜி, ஜியோ சாவன் வழங்கும் மைன்ட் வாய்ஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த தகவலை அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறும்போது, ’’ஷூட்டிங் முடியும் வரை யாரும் அசைவம் சாப்பிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருக்கி றேன். படக்குழு சைவத்துக்கு மாறிவிட்டது. நயன்தாராவும் சைவத்துக்கு மாறி விரதம் இருக்க உள்ளார். இந்த படத்தில் சமூகத்திற்கு தேவையான மெசேஜ் இருக்கிறது. கன்னியாகுமரி அம்மனுக்கு, மூக்குத்தி அம்மன் என்ற பெயர் உண்டு. அதையே படத்துக்கு வைத்திருக்கிறேன். நயன்தாரா இந்தப் படத்தில் இணைந்திருப்பதால் அதிக ரசிகர்களை படம் சென்றடையும்’’ என்று தெரிவித்திருக்கிறார்.
உலகின் சக்திவாய்ந்த பெண்கள்: நிர்மலா சீதாராமனுக்கு இடம்..!
ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி
ஜில்.. கிரேட்டா! ஜில்!! - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட்!
பப்ஜி ஆர்வத்தில் தண்ணீருக்கு பதிலாக கெமிக்கலைக் குடித்த இளைஞர் உயிரிழப்பு!
3 குழந்தைகளை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை: லாட்டரி சீட்டே காரணம் என மரண வாக்குமூலம்..!