[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

'கபாலி' படம் தொடர்பான வழக்கு... உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

kabali-movie-case

‘கபாலி’ திரைப்படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கக்கோரி கலைப்புலி தாணு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் வி. கிரியேஷன்ஸ் சார்பாக ‘கபாலி’ திரைப்படத்தை கலைப்புலி எஸ். தானு தயாரித்துள்ளார். இப்படத்தை வரும் 22ம்தேதி உலகம் ‌முழுவதும் திரையிடுவதற்கு திட்டமிட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், காப்புரிமை சட்டத்திற்கு எதிராகவும் சட்ட விரோதமாகவும் இணைய தளங்களில் ‘கபாலி’ படம் வெளியிடப்பட வாய்ப்பிருப்பதாகவும் அதனை தடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தாணு தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற ‌நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வரவுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close