[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS தனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

’தர்பார்’ டப்பிங்கை முடித்தார் ரஜினி: ஏ.ஆர்.முருகதாஸ் தகவல்!

rajinikanth-completed-darbar-dubbing

’தர்பார்’ படத்தின் டப்பிங்கை நடிகர் ரஜினிகாந்த் முடித்துவிட்டதாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

’பேட்ட’ படத்திற்கு பிறகு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ’தர்பார்’ படத்தில் நடித்துள்ளார் ரஜினிகாந்த். இதில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது.

இதன் ஷூட்டிங் நிறைவடைந்ததை அடுத்து, போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. டப்பிங் பணிகள் சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடந்து வருகிறது. 

இந்நிலையில் தனது காட்சிக்கான டப்பிங் பணிகளை ரஜினிகாந்த்  முடித்துவிட்டதாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார். ‘என் வாழ்க்கையில் சிறந்த டப்பிங் அனுபவம் இது. தலைவர் தர்பார் டப்பிங்கை முடித்துவிட்டார்’ என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார் அவர்.

 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close