போலியான சமூக வலைத்தளப் பக்கங்களின் மூலம் உதயநிதி பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாக நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்திருக்கிறார்.
தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் மீது பாலியல் புகார்களை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி. தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்த அவர், தற்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை ஸ்ரீரெட்டி, திமுக இளைஞரணி செயலாளரும் நடிகருமான உதயநிதியுடன் தன்னை இணைத்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகவும், அதன்மூலம் அவர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் இருக்கும் முன்னணி கட்சியில் இணைய இருப்பதாகவும், அதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனவும் அவர் குறிப்பிட்டார். எனக்கும், உதயநிதிக்கும் தொடர்பில்லை எனவும் உதயநிதியை நேரில் பார்த்ததில்லை எனவும் தெரிவித்தார்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு ஆலோசகராக விஜயகுமார் நியமனம்
“பருவநிலை மாற்றங்களால் பறவைகளின் உடலமைப்பில் மாற்றம்”-ஆய்வில் தகவல்
“போலீஸ் செய்தது சரியே.. ஆனாலும்...?: தெலங்கானாவில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டவர்களின் குடும்பம்..!
ஆளுநர் பதவியா..? அதிபர் கோத்தபய ராஜபக்சவை ஆதரிப்பது ஏன்..? - முத்தையா முரளிதரன் பேட்டி
உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய தேதி விரைவில் வெளியிடப்படும்: மாநில தேர்தல் ஆணையர்..!