[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்

விஜய் சேதுபதியின் ‘சங்கத் தமிழன்’ இன்று ரிலீஸ் இல்லை

vijay-sethupathi-s-sanga-thamizhalan-release-postponed

விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சங்கத் தமிழன்’ படம் இன்று வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி இரண்டு வேடங்களில் நடித்துள்ள படம், ’சங்கத் தமிழன்’. ராஷி கன்னா, நிவேதா பெத்துராஜ் உட்பட பலர் நடித்துள்ளனர். விஜய் சந்தர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். விஜயா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம், தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது. ஆனால், ரிலீஸ் ஆகவில்லை. இதையடுத்து படம் இன்று ரிலீஸ் ஆவதாக இருந்தது. இதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருந்தன.

இந்நிலையில் படம் இன்றும் ரிலீஸ் ஆகவில்லை என்று கூறப்படுகிறது. '’இதற்கு முன் ’வீரம்’ படத்தை இந்த நிறுவனம் தயாரித்திருந்தது. அதில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் கூறி வருகின்றனர். அதோடு விஜய் சேதுபதிக்கும் சம்பள பாக்கி இருக்கிறது. இந்தப் பிரச்னை காரணமாக படம் ரிலீஸ் ஆகவில்லை. ரிலீஸ் செய்வதற்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. இன்று மாலைக்குள் பிரச்னை முடிந்தால், நாளை படம் வெளியாகும்'’ என்று சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close