[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவின் நகலை இந்திய மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லிமன் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கிழித்ததால் பரபரப்பு
  • BREAKING-NEWS குடியுரிமை திருத்த மசோதாவுக்கு தேசியவாத காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS குடியுரிமை திருத்த மசோதாவில் இலங்கை சிறுபான்மையினரையும் சேருங்கள் - பிரசன்னா ஆச்சார்யா, பிஜூ ஜனதாதளம் எம்.பி
  • BREAKING-NEWS குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவிற்கு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எதிர்ப்பு
  • BREAKING-NEWS 2009 மக்களவை தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: ப.சிதம்பரம் ஆஜராக மேலும் ஒரு மாதம் அவகாசம்
  • BREAKING-NEWS நித்யானந்தா எங்கிருக்கிறார்? - டிச. 12க்குள் கர்நாடக அரசு மற்றும் காவல்துறை அறிக்கை அளிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS மக்களவையில் ஆயுதச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது

பார்ட்டிக்குச் சென்றால் வாய்ப்புக் கிடைக்குமா? என்ன சொல்கிறார் ரகுல் பிரீத் சிங்?

nobody-is-going-to-give-you-work-just-because-you-attended-a-party-says-rahul-preet-singh

ஷங்கர் இயக்கத்தில் கமலின் ’இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார் ரகுல் பிரீத் சிங். படத்தில் ஏற்கெனவே காஜல் அகர்வால் இருந்தாலும் தனக்கு முக்கியத்துவம் கொண்ட கேரக்டர் என்கிறார் ரகுல். அதென்ன கேரக்டர்? 

‘’காஜல் அகர்வால் பிளாஷ்பேக் காட்சியில் வருவார். நான் இப்போது சித்தார்த் கேரக்டருக்கு ஜோடியாக நடிக்கிறேன். எனது காட்சிகளுக்கும் முக்கியத்துவம் இருக்கிறது. ஷங்கர் சாருக்கு என்ன தேவை என்று தெரியும். கமல் சார் சிறந்த நடிகர். இவர்களுடன் பணியாற்றுவது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.

நான் நடித்துள்ள இரண்டாவது இந்தி படமான ’மர்ஜவான்’ படத்தில் என்ன கேரக்டர் என்று கேட்கிறார்கள். அதில் விலை மாது கேரக்டரில் நடிக்கிறேன். நான் நடிக்க விரும்பிய கேரக்டர் இது. ரசித்து நடித்திருக்கிறேன். இந்தியில், பார்ட்டிகளுக்கு சென்றால் பட வாய்ப்புக் கிடைத்துவிடும் என்று சொல்வதை ஏற்கமாட்டேன். 

சினிமா விழாக்களின் பார்ட்டிக்குச் செல்வது உங்கள் பழக்கம் மற்றும் சம்பந்தப்பட்டவர்களுடனான நட்பு தொடர்பான விஷயம். அங்கு செல்வதால் யாரும் வாய்ப்பு தரமாட்டார்கள். அங்கு சிலரை நீங்கள் தொடர்பு கொள்ள முடியும். ஆனால், சிறந்த திறமைதான் வாய்ப்புகளை கொடுக்கும். இன்று நல்ல கதைகள்தான் பேசப்படுகின்றன. தொடர்ந்து சிறந்த கதைகள் வரும்போது திறமையானவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது அதிகரிக்கும்.

இந்தி மற்றும் தென்னிந்திய படங்களில் நடித்து வருவது பற்றி கேட்கிறார்கள். ஐதராபாத்துக்கும் மும்பைக்கும் பறந்துகொண்டிருக்கிறேன். அப்படி இருப்பது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது’’ என்கிறார் ரகுல் பிரீத் சிங்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close