[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை
  • BREAKING-NEWS மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா
  • BREAKING-NEWS காஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா

“சிறப்பு அதிகாரியிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டோம்” - நடிகர் சங்க முன்னாள் நிர்வாகிகள் பேட்டி

former-actor-association-members-press-meet-in-chennai

நடிகர் சங்க சிறப்பு அதிகாரியிடம் பொறுப்புகளை ஒப்படைத்துள்ளதாக நடிகர் சங்க முன்னாள் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

நடிகர் சங்கத்திற்கு சிறப்பு அதிகாரி நியமனம் செய்யப்பட்ட நிலையில், நடிகர் சங்கத் முன்னாள் தலைவர் நாசர், முன்னாள் பொருளாளர் கார்த்தி உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தினர். அவர்கள் பேசும்போது, “நாங்கள் அரசை குறை சொல்லமாட்டோம். இது சில தனிநபர்கள் நடிகர் சங்கத்தை நெருக்கடியில் தள்ள வேண்டும் என நினைத்து செய்ததுதான். இந்த நிலையில்தான் சிறப்பு தனி அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

இன்று காலை சிறப்பு அதிகாரி வந்து பணியை ஏற்றுக்கொண்டார். அவரிடம் ஆவணங்களை கொடுத்துள்ளோம். ஒரு அறை மட்டும் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. அது தேர்தல் நடத்திய அதிகாரியின் கட்டுப்பாட்டில் உள்ளது. பொதுச்செயலாளர் விஷால் மீது குற்றச்சாட்டு கூறுபவர்கள், ஆதாரத்தை கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்போகிறோம். 

4 பேர் கொடுத்த புகாரால் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ள சங்கத்தின் செயல்பாட்டை நிறுத்தி வைப்பது எப்படி நியாயமாகும். இதுதொடர்பாக முதல்வரை சந்தித்திருக்கிறோம். ஆனால் நீதிமன்றத்தின் கீழ் வழக்கு இருப்பதால் வேறு எதுவும் செய்ய முடியாத நிலை உள்ளது” என்று தெரிவித்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close