[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்
  • BREAKING-NEWS தென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது

“விஜய் சேதுபதியின் அலுவலகம் முற்றுகையிடப்படும்”- சில்லறை வணிகர்கள் எச்சரிக்கை

small-vendors-association-to-protest-against-vijay-sethupathi

நடிகர் விஜய் சேதுபதியின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட உள்ளதாக சில்லறை வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பிரபல நடிகர் விஜய் சேதுபதி ஆன்லைன் வர்த்தகம் தொடர்பான ‘மண்டி’ என்ற செயலியின் விளம்பரத்தில் நடித்துள்ளார். இந்த விளம்பரம் சமீபத்தில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகியது. இந்த விளம்பரத்தில், ஆன்லைனில் பொருட்களை வாங்க இந்தச் செயலி பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்த விளம்பரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளதற்கு சில்லறை வணிகர்கள்  சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அவர்களின் அறிக்கையில், “சிறு குறு வியாபாரிகளை பாதிக்கும் ஆன்லைன் வர்த்தகத்திற்கு பணம் வாங்கிக் கொண்டு துணை போகும் நடிகர் விஜய் சேதுபதி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட உள்ளோம். நவம்பர் 04-ம் தேதி திங்கள் கிழமை காலை 10 மணியளவில் விருகம்பாக்கத்தில் உள்ள விஜய் சேதுபதி அலுவலத்தை கொளத்தூர் த.ரவி தலைமையில் முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close