[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்
  • BREAKING-NEWS தென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது

கூட்டம் இல்லாததால் ‘பிகில்’ காட்சியை ரத்து செய்த திரையரங்கம்

bigil-afternoon-show-cancelled-in-devi-paradaise

சென்னை திரையரங்கம் ஒன்றில் கூட்டம் இல்லாததால் ‘பிகில்’ திரைப்படத்தின் மதியக் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. 

அட்லீ இயக்கத்தில் விஜய் - நயன்தாரா நடிப்பில் கடந்த 25-ஆம் தேதி தீபாவளி பரிசாக வெளியான திரைப்படம் ‘பிகில்’. ‘தெறி’, ‘மெர்சல்’ ஆகிய இரண்டு  படங்களை தொடர்ந்து மூன்றாவது படமாக அட்லீ - விஜய் கூட்டணியில் ‘பிகில்’ படம் உருவாகியிருக்கிறது. கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவான இப்படம்  பல நாடுகளில் ரிலீஸானது.

Image result for பிகில் கலெக்‌ஷன்

ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் ரூபாய் 180 கோடி செலவில் இப்படத்தை தயாரித்துள்ளது.திரைக்கு வந்த மூன்று நாட்களில் பிகில் படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடியை தாண்டி வசூலித்திருப்பதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில், சென்னையில் உள்ள தேவி பாரடைஸ் திரையரங்கில் போதிய கூட்டம் இல்லாததால் பிகில் படத்தின் மதியக் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இரவுக்காட்சியும் ரத்து செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை முதல் அங்கு கைதி திரையிடப்படலாம் என கூறப்படுகிறது. 

Image result for பிகில் கலெக்‌ஷன்

ஏற்கெனவே தேவி பாரடைசில் இன்றைய மதியக் காட்சிக்காக டிக்கெட் புக் செய்தவர்களை தேவி சினிமாஸின் வேறு ஸ்கிரீனில் ‘பிகில்’ படம் பார்க்க அனுமதித்துள்ளனர்.  இதுகுறித்து தியேட்டர் நிர்வாகம் கூறுகையில் இது வழக்கமான நடைமுறைதான் எனவும் ஆட்கள் குறைவாக இருந்தால் வேறு திரைக்கு மாற்றுவோம் எனவும் தெரிவித்துள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close