[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ராபர்ட் பயஸ்-க்கு 30 நாட்கள் பரோல்: சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS முல்லைப்பெரியாறு அணை அனைத்து வகையிலும் பாதுகாப்பாக இருக்கிறது - மத்திய அமைச்சர்
  • BREAKING-NEWS சீனாவில் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் தமிழக வீராங்கனை இளவேனில் தங்கப்பதக்கம்
  • BREAKING-NEWS மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்கள் கட்டணத்தை திரும்பப் பெறலாம்: அதிமுக
  • BREAKING-NEWS மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிப்பு
  • BREAKING-NEWS இலங்கையின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கும் மகிந்த ராஜபக்ச இன்று பதவியேற்பு

ஷாருக்கானை இயக்கும் அட்லீ: உறுதிப்படுத்திய இயக்குனர்!

shah-rukh-khan-to-join-hands-with-bigil-director-atlee

இந்தி நடிகர் ஷாருக்கான் நடிக்கும் படத்தை அட்லீ இயக்கப் போவதாக, தெலுங்கு இயக்குனர் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஷங்கரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய அட்லி, ’ராஜா ராணி’ திரைப்படம் மூலம் இயக்குனர் ஆனார். அடுத்து விஜய் நடித்த ’தெறி’ படத்தை இயக்கினார். இந்தப் படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து, விஜய் நடிப்பில் ’மெர்சல்’ படத்தை இயக்கினார். இதையடுத்து இப்போது ’பிகில்’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.

இந்நிலையில் ரசிகர்களின் கேள்விக்கு நேற்று பதிலளித்த அட்லீயிடம் ரசிகர் ஒருவர், ஷாருக்கான் படம் பற்றிக் கேட்டார். அதற்கு அவர், “நான் அவர் மீது அதிக அன்பு வைத்திருக்கிறேன். விரைவில், இணைந்து சிறந்த படைப்பைக் கொடுப்போம்” என்று கூறினார்.

இதற்கிடையே, தெலுங்கு இயக்குனர் ஹரிஷ் ஷங்கர் இதை உறுதிப்படுத்தியுள்ளார். ஐதராபாத்தில் நடந்த ’பிகில்’ பட விழா வில் பேசிய அவர், ‘இந்த செய்தி வெளியே வந்துவிட்டது. அட்லி, ஷாருக்கானை இயக்கப் போகிறார். எப்போது இந்த படம் தொடங்கும் என்று தெரியாது. ஆனால் ஷாருக்கானின் தீவிர ரசிகனாக, இவர்கள் கூட்டணியை ஆவலாக எதிர்பார்க்கிறேன்’’என்றார். 

’ஸீரோ’ படத்துக்குப் பிறகு ஷாருக்கான் எந்தப் படத்திலும் நடிக்காமல் இருக்கிறார். விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close