[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை
  • BREAKING-NEWS திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி
  • BREAKING-NEWS நீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்

“மாமனிதன் எப்போது வெளியாகும் என என்னைக் கேட்காதீங்க” - சீனு ராமசாமி 

seenu-ramasamy-tweets-about-maamanithan

‘இடம் பொருள் ஏவல்’, ‘மாமனிதன்’ வெளியீடு சம்பந்தமாக சீனு ராமசாமி ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். 

‘கூடல்நகர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சீனு ராமசாமி. அதன் பிறகு இவர் எடுத்த ‘தென்மேற்கு பருவக் காற்று’ படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதும் இதற்கு கிடைத்தது.  இந்தப் படத்தின் மூலம்தான் விஜய்சேதுபதி நாயகனாக அறிமுகமானார்.

அதன் பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் அனைத்து படங்களுமே ஏறுமுகம்தான். இதனை அடுத்து ‘நீர்பறவை’, ‘தர்மதுரை’ எனப் பல படங்களை சீனுராமசாமி இயக்கினார். 

இவர் லிங்குசாமி தயாரிப்பில் விஜய் சேதுபதி மற்றும் விஷ்ணு விஷாலை வைத்து எடுத்த இடம் பொருள் ஏவல்’ திரைப்படம் வெளியாகவில்லை. சில வருடங்களாகவே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது அந்தப் படம். இப்படம் வெளியாவதற்கு முன்பே விஜய் சேதுபதியை வைத்து மீண்டும் ‘மாமனிதன்’ என்ற படத்தை இவர் இயக்கி வந்தார்.

இந்நிலையில் இந்த இரு படங்கள் குறித்தும் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில்,  “விஜய் சேதுபதி & விஷ்ணு விஷால் நடித்த ‘இடம் பொருள் ஏவல்’ மற்றும் விஜய் சேதுபதி நடித்த ‘மாமனிதன்’ இந்த இரண்டு படங்களில் இயக்குநராக என் பணி முடிந்து விட்டது. வெளியீடு சம்பந்தமான தகவல்களை என்னிடம் கேட்கும் அன்பர்களே.. நீங்கள் கேட்கக் வேண்டிவர்கள் லிங்குசாமியும் யுவன் சங்கர் ராஜாவும்தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து இரு படங்களை இயக்கி முடித்த இவர், அது வெளியாவதில் தாமதம் நிலவுவதால் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close