[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ராபர்ட் பயஸ்-க்கு 30 நாட்கள் பரோல்: சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS முல்லைப்பெரியாறு அணை அனைத்து வகையிலும் பாதுகாப்பாக இருக்கிறது - மத்திய அமைச்சர்
  • BREAKING-NEWS சீனாவில் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் தமிழக வீராங்கனை இளவேனில் தங்கப்பதக்கம்
  • BREAKING-NEWS மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்கள் கட்டணத்தை திரும்பப் பெறலாம்: அதிமுக
  • BREAKING-NEWS மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிப்பு
  • BREAKING-NEWS இலங்கையின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கும் மகிந்த ராஜபக்ச இன்று பதவியேற்பு

6 வது முறையாக இணையும் ஹரி- சூர்யா: ’சிங்கம் 4’ இல்லையாம்!

suriya-hari-film-will-not-be-another-singam-sequel

ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம், ’சிங்கம் 4’ அல்ல என்று கூறப்படுகிறது.

சுதா கொங்கரா இயக்கும் ’சூரரைப் போற்று’ படத்தில் நடித்து வந்த சூர்யா, அந்தப் படத்தை முடித்துவிட்டார். அடுத்து அவர் சிவா இயக்கும் படத்தில் நடிப்பதாக இருந்தது. அவருக்கு ரஜினி நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்புக் கிடைத்ததால், அந்தப் படத்துக்கான வேலைகளில் இறங்கிவிட்டார். 

இதையடுத்து, ஹரி இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார், சூர்யா. அவர் இயக்கத்தில் ஆறு, வேல் படங்களில் நடித்துள்ள சூர்யா, அடுத்து ’சிங்கம்’ படத்தில் நடித்தார். இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. இதனால் இதன் 2 ஆம் பாகம் வெளியானது. இதற்கும் வரவேற்பு கிடைத்ததால், மூன்றாம் பாகம் ’எஸ்.3’ என்ற பெயரில் உருவானது. இதையடுத்து ஹரியுடன் இப்போது சூர்யா மீண்டும் இணைவதால், இது, ’சிங்கம்’ படத்தின் நான்காம் பாகமாக இருக்கும் என்று கூறப்பட்டது.

ஆனால், படக்குழு இதை மறுத்துள்ளது. ’இது ’சிங்கம்’ படத்தின் 4ஆம் பாகம் அல்ல. புதிதான கதை. ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. சூர்யா-ஹரி கூட்டணியில் இது ஆறாவது படம்’ என்று தெரிவித்துள்ளது. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close