[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கும்பகோணத்தில்‌ பாதாளச்சாக்கடையில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
  • BREAKING-NEWS பயங்கரவாதத்தால் ஆண்டுக்கு 70 லட்சம் கோடி ரூபாய் இழப்பு: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

பிகில் படக்கதை வழக்கில் நாளை மதியம் உத்தரவு 

chennai-high-court-judgement-to-bigil-case-at-tomorrow

பிகில் படக்கதை வழக்கில் நாளை மதியம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் பிகில். இப்படம் அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஆனால், வழக்கம் போல் விஜய்யின் இந்தப் படமும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. 

பிகில் பட கதை தன்னுடையதான் என கூறி உதவி இயக்குநர் கே.பி.செல்வா, கடந்த ஏப்ரல் மாதம் சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் இந்த வழக்கை உயர் நீதிமன்றத்தில் தான் தொடரவேண்டும் எனவும் அதனால் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அட்லி தரப்பு தொடர்ந்து வாதாடி வந்தனர். அதனையடுத்து, திடீரென வழக்கை வாபஸ் பெற்ற செல்வா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனிடையே, வழக்கில் யார் வெல்கிறார்கள் என்பதைவிட சென்னை உரிமையியல் நீதிமன்றம் வழக்கை வாபஸ் பெற அனுமதித்த நடைமுறை சரியா என ஆராய வேண்டியது அவசியம் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் கூறியிருந்தார். 

இந்நிலையில், பிகில் படக்கதை தொடர்பான வழக்கில் நாளை மதியம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close