[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வெப்பச் சலனத்தால் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார் மகிந்த ராஜபக்ச
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ராபர்ட் பயஸ்-க்கு 30 நாட்கள் பரோல்: சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS முல்லைப்பெரியாறு அணை அனைத்து வகையிலும் பாதுகாப்பாக இருக்கிறது - மத்திய அமைச்சர்
  • BREAKING-NEWS சீனாவில் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் தமிழக வீராங்கனை இளவேனில் தங்கப்பதக்கம்
  • BREAKING-NEWS மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்கள் கட்டணத்தை திரும்பப் பெறலாம்: அதிமுக

அஜித்தின் 60வது படத்தின் தலைப்பு வெளியீடு..!

ajith-s-60th-film-title-was-released-its-name-is-valimai

வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 60வது படத்திற்கு ‘வலிமை’ என பெயரிடப்பட்டுள்ளது.

இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘நேர்கொண்ட பார்வை’. இப்படம் வெளியாகி பரவலாக நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து அஜித்தின் 60வது படத்தையும் ஹெச்.வினோத்தான் இயக்குகிறார். இதையும் போனி கபூர்தான் தயாரிக்க உள்ளார். படத்திற்கு யுவன் சங்கர் இசையமைக்கிறார்.

இந்நிலையில், படத்தின் பூஜை இன்று போனி கபூரின் சென்னை அலுவலகத்தில் நடைபெற்றது. படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. படத்திற்கு, ‘வலிமை’ என பெயரிடப்பட்டுள்ளது. அஜித் படத்திற்கான தலைப்பு வெளியாகியுள்ள நிலையில் அவரது ரசிகர்கள் இந்திய அளவில் அதனை ட்ரெண்ட் செய்துள்ளனர்.

இதற்கு முன்னர் ஒரு நடிகர் படத்தின் தலைப்பை வெளியிடாமல், படத்தின் எண்ணிக்கையை வைத்து தலைப்பு வெளியிட்டது அஜித் படத்தில் ஒன்றில் இருந்துதான். தற்போது அதை மாற்றும் விதமாக பூஜை அன்றே அஜித் படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேவையற்ற எதிர்பார்ப்பை உண்டாக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் தலைப்பு வெளியிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தப்படம் 2020 ஆண்டு கோடை கொண்டாட்டமாக வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close