[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜஸ்தானில் பேருந்து - லாரி மோதி விபத்து: 14 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS இலங்கையின் அதிபராக பதவியேற்றார் கோத்தபய ராஜபக்ச
  • BREAKING-NEWS டிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை: மாநில தேர்தல் ஆணையம் தகவல்
  • BREAKING-NEWS கரூரில் உள்ள கொசுவலை தயாரிப்பு நிறுவனம் 435 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு
  • BREAKING-NEWS உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் எஸ்.ஏ.பாப்டே

அக்.25ல் வெளியாகிறது ‘பிகில்’ - படக்குழு அறிவிப்பு

bigil-will-hit-screens-worldwide-on-25th-october-2019

நடிகர் விஜய் நடித்துள்ள 'பிகில்' திரைப்படம் அக்டோபர் 25ம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

விஜய், நயன்தாரா, விவேக், கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி உட்பட பலர் நடித்துள்ள படம், ’பிகில்’. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. கால்பந்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் விஜய், பயிற்சியாளராக நடிக்கிறார். 

இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகமலேயே இருந்தது. இதற்கிடையே நேற்று பிகில் திரைப்படத்துக்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிலையில் படம் வெளியாகும் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 25ம் தேதி பிகில் திரைப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 27ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் இரு நாட்களுக்கு முன்பாகவே படம் வெளியாக உள்ளது. அதே தினத்தன்று கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள கைதி திரைப்படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close