[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS தனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

கமல் பிறந்தநாளில் வெளியாகும் தர்பார் படத்தின் தீம் மியூசிக்

dharbar-theme-music-release-date-announced

ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘தர்பார்’ படத்தின் புதிய அப்டேட்டை அப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார். 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ‘தர்பார்’. இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஏற்கெனவே ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்ட’ திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். லைகா நிறுவனம் ‘தர்பார்’ திரைப்படத்தை தயாரித்து வருகிறது. இந்தத் திரைப்படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். 


இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், செகண்ட் லுக் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘தர்பார்’ குறித்த புதிய அப்டேட் கொடுத்துள்ளார். அதில், கமல் பிறந்த நாளான நவம்பர் 7-ஆம் தேதி ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரும், தீம் மியூசிக்கும் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close