[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ராபர்ட் பயஸ்-க்கு 30 நாட்கள் பரோல்: சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS முல்லைப்பெரியாறு அணை அனைத்து வகையிலும் பாதுகாப்பாக இருக்கிறது - மத்திய அமைச்சர்
  • BREAKING-NEWS சீனாவில் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் தமிழக வீராங்கனை இளவேனில் தங்கப்பதக்கம்
  • BREAKING-NEWS மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்கள் கட்டணத்தை திரும்பப் பெறலாம்: அதிமுக
  • BREAKING-NEWS மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிப்பு
  • BREAKING-NEWS இலங்கையின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கும் மகிந்த ராஜபக்ச இன்று பதவியேற்பு

‘பிகில்’ ரிலீஸ் எப்போது? - ட்வீட் செய்த தயாரிப்பாளர்

bigil-censor-formalities-are-done-says-producer

‘பிகில்’ பட வெளியீடு குறித்து அதன் தயாரிப்பாளர் அர்ச்சனா ட்வீட் செய்துள்ளார். 

விஜய், நயன்தாரா, விவேக், கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி உட்பட பலர் நடித்துள்ள படம், ’பிகில்’. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. கால்பந்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் விஜய், பயிற்சியாளராக நடிக்கிறார். 

இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ தேதி அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் ‘பிகில்’ பட வெளியீடு குறித்து அதன் தயாரிப்பாளர் அர்ச்சனா ட்வீட் செய்துள்ளார்.

அதில், ‘பிகில்’ படத்திற்கான சென்சார் நிறைவடைந்தது. விரைவில் வெளியீட்டு தேதியை அறிவிப்போம். உங்கள் ஆதரவுக்கும், அன்புக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே பிகில் திரைப்படத்துக்கு U/A சான்றிதழை தணிக்கை குழு வழங்கியுள்ளது. சுமார் 3 மணி நேரம் ஓடக்கூடிய வகையில் பிகில் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close