விஜய் நடித்துள்ள ’பிகில்’ படத்தை சீனாவிலும் வெளியிடப் படக்குழுத் திட்டமிட்டுள்ளது.
விஜய், நயன்தாரா, விவேக், கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி உட்பட பலர் நடித்துள்ள படம், ’பிகில்’. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசைமைத்துள்ளார். இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. கால்பந்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் விஜய், பயிற்சியாளராக நடிக்கிறார்.
மகளிர் கால்பந்து அணிக்கு பயிற்சியாளராக வரும் அவர், முன்னாள் கால்பந்து வீரர். சூழ்ச்சியால் விளையாட்டை விட்டு ஒதுங்கியிருக்கும் அவர், ஓர் அணியை வெற்றியடையச் செய்வதற்காக பயிற்சியாளராகக் களமிறங்குகிறார். அதிரடியான அவரது திட்டம் மற்றும் திறமை மூலம் மகளிர் கால்பந்து அணி, கோப்பையை வெல்கிறது. அது எப்படி என்பதுதான் கதை என்கிறார்கள்.
சுமார் 180 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம், வரும் 25 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதற்கிடையே இந்தப் படத்தை சீனாவிலும் வெளியிட படக்குழுத் திட்டமிட்டுள்ளது.
சீனாவில் ஏற்கெனவே வெளியிடப்பட்ட அமிர்கானின் ’டங்கல்’, ஸ்ரீதேவி நடித்த ’மம்’ ஆகிய இந்தி படங்கள் நல்ல வசூலை குவித்திருப்பதால், இந்தப் படத்தையும் அங்கு வெளியிட ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
குடியுரிமை மசோதா நிறைவேற்றம் முதல் கார்த்திகை தீபம் வரை #TopNews
குடியுரிமை திருத்த மசோதா நகலை மக்களவையில் கிழித்த ஓவைசி
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
ஊராட்சித் தலைவர் பதவி ஏலம்? - மாவட்ட ஆட்சியர் விளக்கம்
நித்தியானந்தா எங்கு இருக்கிறார்? - அரசுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..!
தாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்ஷன்: மனங்களை வென்ற வீடியோ!
பெண்களுக்கு என்ன கற்றுக்கொடுக்க வேண்டும்?: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற பெண்ணின் அசத்தல் பதில்!