[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா ஆளுநரை நாளை சந்திக்க சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முடிவு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்

தனது படம் ரிலீஸான நாளில் உயிரிழந்த ஹாலிவுட் நடிகர்

robert-forster-oscar-nominated-star-of-jackie-brown-dies-at-78

மூளை கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பார்ஸ்டர் மரணமடைந்தார். அவருக்கு வயது 78. 

பிரபல ஹாலிவுட் நடிகர் மார்லன் பிராண்டோ மற்றும் எலிசபெத் டெய்லர் நடித்த ரெஃப்ளக்‌ஷன்ஸ் இன் எ கோல்டன் ஐ (1967) என்ற படம் மூலம் அறிமுகமானவர் ராபர்ட் பார்ஸ்டர். தொடர்ந்து, த பிளாக் ஹோல், அலிகேட்டர், டெல்டா போர்ஸ், லண்டன் ஹேஸ் ஃபாலன், வாட் தே ஹேட், டேம்செல் உட்பட சுமார் 100 ஹாலிவுட் படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ஏராளமான படங்களிலும் டி.வி.தொடர்களிலும் நடித்துள்ள இவர், ’ஜாக்கி பிரவுன்’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.

கடந்த சில மாதங்களாக மூளை கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வீட்டில் நேற்று மரணமடைந்தார். 

இவர் நடித்திருந்த ’எல் கேமினோ: எ பிரேக்கிங் பேட் மூவி’ என்ற படம் நேற்றுதான் ரிலீஸ் ஆனது. வின்ஸ் கில்லிகன் இயக்கி இருந்த இந்தப் படத்தில் ஆரோன் பால், ஜெஸ்சி பிளிமன்ஸ், கிறிஸ்டர் ரிட்டர் உட்பட பலர் நடித்துள்ளனர். ராபர்ட் பார்ஸ்டர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

அவர் நடித்த படம் ரிலீஸான அன்று அவர் உயிரிழந்தது, படக்குழுவுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close