[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தோனேசியாவைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம். 7.4 ரிக்டர் அளவில் தாக்கிய நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுப்பு
  • BREAKING-NEWS கும்பகோணத்தில்‌ பாதாளச்சாக்கடையில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
  • BREAKING-NEWS பயங்கரவாதத்தால் ஆண்டுக்கு 70 லட்சம் கோடி ரூபாய் இழப்பு: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

’பெட்ரோமேக்ஸ்’ – இதுல எப்படிணே லைட் எரியும் – திரைவிமர்சனம்…

petromax-movie-review

தமன்னா, யோகிபாபு, காளி வெங்கட் உள்ளிட்ட முக்கிய நடிகர்களின் கலக்கல் கூட்டணியில் உருவான பெட்ரோமேக்ஸ் திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது., முழு நீள காமெடி ஹாரர் படமாக வெளியாகியிருக்கும் இப்படத்தை இயக்கியிருக்கிறார் அதே கண்கள் படத்தை இயக்கிய ரோகின் வெங்கடேசன். டேனி ரேமாண்ட் இதனை ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தெலுங்கில் வெளியான அனந்தோ பிரம்மா படத்தின் ரீ மேக் தான் இப்படம்.

சொத்துக்காக தனது குடும்பத்தையே கொலை செய்கிறார் சரவணனாக வரும் ப்ரேம். ஆனால் அவர் போட்ட கணக்கு தப்பிவிடுகிறது., பேய்கள் இருக்கும் வீட்டை விற்க அவர் எடுக்கும் முயற்சிகளும் அதில் வந்து கலந்து கொள்ளும் காமெடி பட்டாளத்தின் கலகல நகைச்சுவையுமே பெட்ரோமேக்ஸ்.

பேய் வீட்டில் தங்கினால் பணம் கிடைக்கும் என நம்பி வரும் சத்யன், காளி வெங்கட், முனீஸ்காந்த் ஆகியோரின் கதாப்பாத்திர வடிவமைப்பும் அவர்கள் இந்த டாஸ்க்கை ஏற்றுக் கொள்வதற்கான பின்னணியும் பலவீனம்.

ஜிப்ரான் தனது வேலையை மிகச் சரியாக செய்துள்ளார்., விஷுவல் எபக்ட்ஸ்க்கான பெரிய மெனக்கெடல் எதுவும் இல்லாமல், செட் ப்ராபர்ட்டிகளை வைத்தே பயமுறுத்த முயற்சி செய்திருக்கிறார்கள்., (பட்ஜட் பிரச்சனையா பாஸ்…)

சமீபமாக தமிழின் முன்னனி நடிகைகள்., கதநாயகனுக்கு ஜோடியாக வலம் வரும் பாத்திரங்களைவிடவும் தனக்கு தனி முக்கியத்துவம் இருக்கும் கதைகளை தேர்வு செய்து நடிக்கத் துவங்கியுள்ளனர். அவ்வகையில் தமன்னாவிற்கு தனி முக்கியத்துவம் இருக்கும் இப்படத்தை அவர் தேர்வு செய்தது நல்ல முடிவு தான் என்றாலும். படக்குழு இக்கதையை திரைவடிவமாக்குவதில் கோட்டை விட்டுவிட்டனர்.

படத்தின் வணிக நோக்கத்திற்காக ஒரே ஒரு நாள் கால்ஷீட் பெற்று யோகி பாபுவை பயன்படுத்தியிருக்கிறார்கள். உண்மையில் அவர் இக்கதையில் எந்த வகையிலும் உபயோகமாக இல்லை.

ஒரு காட்சிக்கும் இன்னொரு காட்சிக்குமான தொடர்பு ஆங்காங்கே அறுந்து விடுவதால் கதையை பின் தொடர்வதில் சிக்கல் இருக்கிறது. மலருது புது நாளே பாடலில் தமன்னாவின் மொத்த அழகையும் அழகாக படம் பிடித்திருக்கிறார் ரேமாண்ட்.

கொஞ்சம் வலுவான திரைக்கதையும், வசனமும் இருந்திருந்தால் ’பெட்ரோமேக்ஸ்’ லைட் நன்றாகவே எரிந்திருக்கும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close