[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜஸ்தானில் பேருந்து - லாரி மோதி விபத்து: 14 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS இலங்கையின் அதிபராக பதவியேற்றார் கோத்தபய ராஜபக்ச
  • BREAKING-NEWS டிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை: மாநில தேர்தல் ஆணையம் தகவல்
  • BREAKING-NEWS கரூரில் உள்ள கொசுவலை தயாரிப்பு நிறுவனம் 435 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு
  • BREAKING-NEWS உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் எஸ்.ஏ.பாப்டே

ரஜினியின் அடுத்தபட இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு 

thalaivar-168-superstar-s-next-movie-directed-by-siva

நடிகர் ரஜினிகாந்தின் 168வது படத்தை இயக்குநர் சிவா இயக்க உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியாக உள்ள படம் ‘தர்பார்’. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று டப்பிங் வேலை சென்று கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்த படத்திற்கு ஆயத்தமாகியுள்ளார். 

அஜீத் நடித்த வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை தொடர்ந்து இயக்கிய இயக்குநர் சிவா ரஜினியின் அடுத்த படத்தை இயக்குகிறார் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

மேலும் ரஜினியின் எந்திரன், பேட்ட படங்களை தயாரித்த அந்நிறுவனம் தொடர்ந்து 3 வது முறையாக இந்தப் படத்தை தயாரிக்கிறது. ரஜினிக்கு இது 168வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close