[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பு வழங்குகிறது டெல்லி உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகை, இந்தியா கேட் பகுதிகளில் காற்று மாசு அதிகரிப்பு; வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS லாக்-அப் என்கவுன்டர் விவகாரம்: எஸ்.ஐ. காளிதாஸுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!
  • BREAKING-NEWS சென்னை மேயர் பதவிக்கு போட்டியிட உதயநிதி ஸ்டாலின் சார்பில் விருப்பமனு
  • BREAKING-NEWS ரஃபேல் தீர்ப்பு எதிர்க்கட்சியினருக்கு சரியான பதிலடி - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS மனைவி நளினி மற்றும் உறவினர்களைப் பார்க்க முருகனுக்கு அனுமதி வழங்குக - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS தென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத் தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு

சென்சார் பிரச்னைகளை முறியடித்து வெற்றிபெறுமா பிகில்?

thalapathy-vijay-bigil-to-the-censor-board-in-the-second-week-of-october

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படத்திற்கான தணிக்கை அடுத்த வாரம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் என்று கூறப்பட்ட நிலையில் தணிக்கை செய்யப்படுவது உறுதியாகியுள்ளது

தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் விஜய் - இயக்குநர் அட்லி கூட்டணியில் உருவாகியுள்ள மூன்றாவது படம் 'பிகில்'. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா, நகைச்சுவை கதாபாத்திரத்தில் விவேக் மற்றும் யோகிபாபு நடித்துள்ளனர். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு பிகில் படத்தை உருவாகியுள்ளார் அட்லி. இதனால், விளையாட்டுத் துறையில் நடைபெறும் அரசியல் மற்றும் ஊழல்கள் பற்றி ஏராளமான காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல கால்பந்தாட்டத் துறையில் சாதிக்க நினைக்கும் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்னென்ன என்பதையும் பேசியுள்ளனர். இதனால் படத்தில் சில அரசியல் வசனங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிகிறது.

            

பிகில் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஜய், ஆளும் கட்சிக்கு எதிராக சில கருத்துக்களை பேசினார். அவரின் பேச்சுக்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பிகில் படத்திற்கு சிக்கல் ஏற்படும் என்றும் சொல்லப்பட்டது.

இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனம் பிகில் படத்தை தணிக்கைக்கு அனுப்பாமல் இருந்தனர். இதனால் தணிக்கை சான்றிதழ் கிடைக்க தாமதம் ஏற்படலாம் என்றும் கூறப்பட்டது. ஏனென்றால், தணிக்கை குழுவின் விதிப்படி, ஒரு திரைப்படத்தை தணிக்கை செய்ய, விண்ணப்பம் பெற்ற நாளில் இருந்து 68 நாட்கள் வரை தணிக்கைக் குழு எடுத்துக் கொள்ளலாம். ஆனால், தீபாவளிக்கு ஒரு மாதமே இருந்த நிலையில் பிகில் படக்குழு தணிக்கைக்கு விண்ணப்பிக்காமல் இருந்தனர். இதனால் பிகில் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் என்று சினிமா துறையில் செய்திகள் பாரவின. மேலும் தீபாவளிக்கு படம் வெளியாகாது என்றும் சொல்லப்பட்டது.

               

இதுபோன்ற தகவல்கள் குறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனமோ, படத்தின் இயக்குநரோ கண்டுக்கொள்ளவில்லை. இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் பிகில் படத்தை தணிக்கைக்கு விண்ணப்பித்தனர். இதனால் தணிக்கை குழு படத்தை எப்போது பார்ப்பார்கள், தணிக்கையில் என்ன சான்றிதழ் கிடைக்கும், அரசின் அழுத்தம் ஏதேனும் இருக்கலாம் என்று பல கேள்விகள் எழுந்தன. இந்த நிலையில், பிகில் திரைப்படத்திற்கான தணிக்கை அடுத்த வாரத்தில் நடைபெற வாய்ப்பு என்று புதிய தலைமுறைக்கு தணிக்கை குழு தரப்பினர் கூறியுள்ளனர்.

           

தீபாவளி என்றால் விஜய் படம் வருவதும், விஜய் படம் வந்தால் கூடவே பிரச்னைகள் வருவதும் சமீபகாலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இருந்தாலும் முந்தைய விஜய் படங்களை போலவே பிரச்னைகளை முறியடித்து பிகில் வெற்றிபெறுமா என்பதை பொருத்திருந்தே பார்க்க வேண்டும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close