[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத் தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS பிரதமர் மோடியை விமர்சித்ததாக ராகுல்காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு முடித்து வைப்பு
  • BREAKING-NEWS ரஃபேல் கொள்முதலில் ஊழல் நடைபெறவில்லை என்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா

"உங்களுக்கு வயசே ஆகாதா தலைவா" பிகில் புதிய போஸ்டரால் ரசிகர்கள் குதூகலம்

ahead-of-trailer-release-bigil-team-released-new-poster-to-cheer-vijay-fans

விஜய், நயன்தாரா, விவேக், கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி உட்பட பலர் நடித்துள்ள படம், ’பிகில்’. ஏஜிஎஸ் என்டர் டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசைமைத்துள்ளார். தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆகிறது. இதற்கிடையே படத்தின் டிரைலரை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் இன்னும் டிரைலர் வெளியாகவில்லை.

இந்தப் படத்தின் டிரைலர் அக்டோபர் 4ம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், ட்ரெய்லர் வெளியாகவில்லை. ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அடுத்த அப்டேப்  எப்போது என ட்விட்டரில் ஹேஷ்டேக் போட்டு கேள்வி எழுப்பும் அளவிற்கு சென்றுவிட்டனர். ஒலி வடிவமைப்பில் திருப்தி இல்லாததால் அதனை மேலும் மெருகேற்ற அட்லி விரும்பியதால் இந்த தாமதம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது.

தீபாவளிக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இரண்டாவது வாரம் தணிக்கைக் குழுவுக்கு படம் அனுப்பட வேண்டும் என்பதால், அதற்காக முழு வீச்சில் படக்குழு பணியாற்றி வருகிறது. அதோடு மதுரை மற்றும் விசாகப்பட்டினத்தில் படத்துக்காக சில பேட்ச் ஒர்க் வேலைகளும் நடக்கின்றன.

இந்நிலையில், பிகில் படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் 12 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு நேற்று அறிவித்தது. இந்நிலையில் இன்று பிகில் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டது. இதில் கிறிஸ்தவ திருமண கோலத்தில் இருக்கும் நயன்தாரா, விஜய்யை ஓரக் கண்ணால் பார்ப்பதுபோல வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் போஸ்டரில் விஜய் அதிக இளமையுடன் இருப்பதாக அவரின் ரசிகர்கள் சிலாகித்து வருகிறார்கள். அதில் பலரும் "வயது கூட கூட அதிக இளமையுடன் இருக்கிறார் விஜய்" என்று ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் புகழ்ந்து வருகின்றனர்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close