[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

‘செய்வதைத்தான் சொல்வேன்’ - கலைஞானத்திற்கு வீடு வாங்கி கொடுத்த ரஜினி

actor-rajinikanth-gave-a-new-house-to-producer-kalaignanam

‘பைரவி’ படம் மூலம் தன்னை ஹீரோவாக அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் கலைஞானத்திற்கு அறிவித்தபடி நடிகர் ரஜினிகாந்த் வீடு வழங்கினார்.

வில்லனாக நடித்துக்கொண்டு இருந்த ரஜினிகாந்த், ‘பைரவி’ திரைப்படம் மூலம் ஹீரோவாக ஆனார். அந்தப்படத்தை தயாரித்தவர் கதாசிரியர் கலைஞானம். அவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் பாராட்டு விழா ஒன்று நடத்தப்பட்டது. கலைஞானத்தின் 75 ஆண்டுகால சினிமா பயணத்தை சிறப்பிக்கும் வகையிலும் அவரது 90தாவது பிறந்தநாளை கொண்டாடும் வகையிலும் இந்தப் பாராட்டு விழா இயக்குநர் பாரதிராஜா தலைமையில் நடந்தது. அந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த, பாரதிராஜா, சிவக்குமார், அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

விழாவில் பேசிய சிவக்குமார், கலைஞானம் இன்னமும் வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறார். அவருக்கு தமிழக அரசு ஒரு வீடு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதற்குப் பதில் அளித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ கலைஞானத்திற்கு தமிழக அரசு வீடு வழங்கும் என தெரிவித்தார். 

பின்னர் விழாவில் பேசிய ரஜினிகாந்த், கலைஞானம் இன்னமும் வாடகை வீட்டில் வசிக்கிறார் என்பது எனக்கு தெரியாமல் போய்விட்டது. அவருக்கு என் சொந்த செலவில் வீடு வாங்கித்தருவேன் எனத் தெரிவித்தார்.

அதன்படி சென்னை விருகம்பாக்கத்தில் ரூ.45 லட்சம் மதிப்புள்ள 3 படுக்கையறை கொண்ட வீடு கலைஞானத்துக்கு வழங்கப்பட்டது. இன்று காலை கலைஞானத்துக்கு வழங்கிய புதிய வீட்டுக்குச் சென்ற ரஜினிகாந்த் குத்துவிளக்கேற்றி வீட்டினை பார்வையிட்டார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close