[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மரணம்

comedy-actor-krishnamurthy-passes-away

பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் மரணமடைந்தார்.

பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி. திருவண்ணாமலையை சேர்ந்த இவர், நடிப்பதற்காக 1983 ஆம் ஆண்டு சென்னை வந்தார். பின்னர் புரொடக்‌ஷன் மானேஜராக வாய்ப்பு கிடைத்தது. பல படங்களுக்கு புரொடக்‌ஷன் மானேஜராக பணியாற்றினார். கூடவே, சின்ன வேடங்களில் நடித்தும் வந்தார். தவசி, எல்லாம் அவன் செயல், நான் கடவுள் உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

’தவசி’ படத்தில், ’எஸ்க்யூஸ்மி, இவர் அட்ரஸ் தெரியுமா? என்று வடிவேலுவிடம் பின்லேடன் முகவரி கேட்பவராக நடித்திருப்பார். ’எல்லாம் அவன் செயல்’ படத்தில் வடிவேலுவை அரிவாளால் மிரட்டுபவராகவும் நடித்திருப்பார். இவர் நடித்த காமெடி காட்சிகள் ரசிகர்களால் அதிகமாக ரசிக்கப்பட்டன. 

படப்பிடிப்பு ஒன்றுக்காக, குமுளி சென்றிருந்த இவருக்கு இன்று அதிகாலை 4.30 மணியளவில் திடீரென்று மாரடைப்பு ஏற்பட் டதை அடுத்து உயிரிழந்தார். மறைந்த கிருஷ்ணமூர்த்திக்கு மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close