[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

விஜய்-யின் ‘பிகில்’ டிரைலர் தாமதம் ஏன்?

why-bigil-trailer-is-getting-delayed

நடிகர் விஜய் நடித்துள்ள ’பிகில்’ படத்தின் டிரைலர் தாமதம் ஏன் என்று இப்போது தெரியவந்துள்ளது.

விஜய், நயன்தாரா, விவேக், கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி உட்பட பலர் நடித்துள்ள படம், ’பிகில்’. ஏஜிஎஸ் என்டர் டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசைமைத்துள்ளார். தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆகிறது. இதற்கிடையே படத்தின் டிரைலரை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் இன்னும் டிரைலர் வெளியாகவில்லை.

இந்தப் படத்தின் டிரைலர் நேற்று வெளியாக இருந்தது. ஆனால், எல்லா விஷயத்திலும் பெர்பக்‌ஷனை எதிர்பார்க்கும் அட்லி, டிரைலரை பார்த்துள்ளார். அதன் ஒலி வடிவமைப்பில் திருப்தி இல்லையாம். இதனால் அதை மாற்றும் வேலையில் படக்குழு
ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தீபாவளிக்கு இன்னும் 22 நாட்களே உள்ள நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இரண்டாவது வாரம்  தணிக்கைக் குழுவுக்கு படம் அனுப்பட வேண்டும் என்பதால், அதற்காக முழு வீச்சில்
படக்குழு பணியாற்றி வருகிறது.

அதோடு மதுரை மற்றும் விசாகப்பட்டினத்தில் படத்துக்காக சில பேட்ச் ஒர்க் வேலைகளும் நடக்கின்றன. இதனால் இயக்குனர் அட்லியால், டிரைலரில் சரியான கவனம் செலுத்த முடியவில்லையாம். இதனால் இன்னும் சில நாட்களில் டிரைலர் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close