[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தோனேசியாவைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம். 7.4 ரிக்டர் அளவில் தாக்கிய நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுப்பு
  • BREAKING-NEWS கும்பகோணத்தில்‌ பாதாளச்சாக்கடையில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
  • BREAKING-NEWS பயங்கரவாதத்தால் ஆண்டுக்கு 70 லட்சம் கோடி ரூபாய் இழப்பு: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

ராம் தைரியமில்லா கோழையா? - 96 ஓராண்டில் களைகட்டிய விவாதம்

second-year-of-96-movie

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் உருவான 96 திரைப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் 4ம் தேதி வெளியானது. இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. படம் வெளியாகி ஓராண்டு முடிவடைந்துவிட்டது. இன்று 96 படம் வெளியான நாள்.  சமூக வலைதளங்களில் 96 படம் தொடர்பாக பலரும் கருத்து தெரிவித்தனர். ராம் கதாபாத்திரம் தொடர்பாக சில விவாதங்களும் காரசாரமாக நடந்தது. ராம் மிகவும் கோழையாக இருந்ததால் ஜானுவை கடைசி வரை தொடவேயில்லை என பலரும் கூறியிருந்தனர்.

இந்நிலையில், இந்த விவாதம் தொடர்பாக ஃபேஸ்புக் பதிவில் பொன் விமலா என்பவர் விரிவான பதிவு ஒன்றினை எழுதியிருந்தார். அதில், “'தைரியமிருந்தா தொட்டுத்தான் பாரேன்' என்று சவால்விட்டு அழைக்கும் உடல் அணுக்களைப் பத்திரமாய் கட்டிக் காப்பாற்றி , கட்டுக்கோப்புடன் வழியனுப்பி வைத்த ராமின் தைரியமும் 96ஐ கொண்டாடவொரு காரணமே!

'ஆமா...கலாசாரக் காவல் காக்குற க்ளைமேக்ஸ். ஏன் கட்டிப் பிடிக்கக்கூட செய்யல. கொஞ்சமும் முற்போக்கு இல்லாத படம் ' என்றெல்லாம் வாதத்துக்கு எடுத்துக் கொண்டாலும், ஒருவேளை ராமுக்குப் பதில் ஜானு திருமணமாகாமல் வெர்ஜினாக காத்திருந்து , அப்படியே சற்று மாறுதலாய் ராமுக்கு திருமணமாகி இருந்து இருவரும் அந்த மெழுகுவர்த்தி இரவில் இணைந்திருந்தால் என்ன சொல்லி இருப்பார்கள்?

ஆண் என்று வரும் போது , அவனுக்கு அது கம்பீரம். அவன் கணக்கு வழக்கு வைத்துக் கொண்டு உடலுறவு செய்யத் தேவையில்லை. அவன் ஏற்கெனவே ஒரு பெண்ணுக்குக் கணவனாக இருந்தாலும் இப்படியான சூழலில் அவன் தவறிழைத்தால் அது தப்பில்லை என்று தானே இப்பொதுச் சமூகம் பெரும்பாலும் முட்டுக்கொடுத்திருக்கும்?( ஆண் என்றால் கலாச்சாரமாவது கசாயமாவதுதானே!)

ஆனால் ராம் என்ன செய்தான்? தனக்கான வாய்ப்புகள் எல்லாம் இருந்தும் உடல்தாண்டிய அன்புக்கும் காதலுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறான். 'எனக்குப் பிடிச்சிருக்கு... உனக்குப் பிடிச்சிருக்கா... நமக்கு அது வேணுமா? என்கிற எவ்வித பரஸ்பர கேள்விகளும், பதில்களும் இருவருக்கும் நடக்காதச் சூழலில் தன்னுள் அப்படியான ஆசை இருக்கிறதோ இல்லையோ அதை அவளிடம் கேட்டுக் காயப்படுத்துவதைவிட கேட்காமல் கடந்துவிடுவதுகூட ஆண்மையென நினைக்கிறான். எல்லாவற்றுக்கும் மேல் ஆண்மை என்பது பெண்மையைச் சேர்வது மட்டுமல்ல. தான் விரும்பும் பெண் தன்னிடம் தன்னை முழுமையாக ஒப்படைக்க மனதளவில் தயாராக இல்லாதபோது அதை அப்படியே ஏற்றுக்கொண்டு சுயமரியாதையுடன் தள்ளி நிற்பவனும் ஆண்மகனே! தொட்டுவிட ஒரு நொடியாகாதுதான். தான் விரும்பிய காதலி கைதொடும் தூரத்தில் இருந்தாலும் அதைத் தொடாமல் திருப்பி அனுப்பத்தான் கூடுதல் தைரியம் வேண்டும்.

ராம் ஜானுவிடம் தேடியது காதலை மட்டுமே. காதலுக்கு 'உடல்மொழி' மட்டுமே தேவையில்லை. அதற்கு 'உயிர்மொழி' கூட போதும் தானே!” என குறிப்பிட்டு இருந்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close