[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா ஆளுநரை நாளை சந்திக்க சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முடிவு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்

பூஜையுடன் தொடங்கியது 'தளபதி64': புகைப்படங்கள்!

thalapathi64-kick-start-from-today

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள ’தளபதி64’ திரைப்படம், பூஜையுடன் இன்று தொடங்கியது.

 ‘மாநகரம்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் விஜய். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இப்படத்தில் விஜயுடன் நடிக்கும் நடிகர்களின் விவரங்களை படக்குழு தொடர்ச்சியாக அறிவித்து வருகிறது.

விஜய்சேதுபதி, மலையாள நடிகர் அந்தோணி வர்கீஸ், சாந்தனு, மாளவிகா மோகனன் ஆகியோர் இணைந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படத்தில் பேராசிரியராக விஜய் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

‘கத்தி’ படத்திற்குப் பிறகு விஜயுடன் ‌மீண்டும் இணைந்துள்ளார் இசையமைப்பாளர் அனிருத். இந்நிலையில்  ‘தளபதி64’ திரைப்படம் பூஜையுடன் இன்று தொடங்கியது. விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் திரைப்பட பூஜையில் கலந்து கொண்டனர்

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close