[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பதவியை நீட்டிக்கக்கோரி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS எங்கள் குடும்பத்தினருக்கான எஸ்பிஜி பாதுகாப்பை நீக்கியதும் அரசியலில் ஒரு அங்கம் தான் - பிரியங்கா காந்தி
  • BREAKING-NEWS மக்கள் அதிமுக பக்கம் இருப்பதால் ரஜினி கூறும் அதிசயம், அற்புதம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் முறை அதிகார துஷ்பிரயோகத்திற்கும், குதிரை பேரத்திற்கும் வழிவகுக்கும் - திருமாவளவன் எம்.பி.
  • BREAKING-NEWS 2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி

’தளபதி 64-’ல் பேராசிரியராக நடிக்கிறாரா விஜய்?

vijay-to-play-a-professor-with-grey-shades-in-thalapathy-64

’பிகிலு’க்குப் பிறகு உருவாகும் ’தளபதி 64’ படத்தில் நடிகர் விஜய் பேராசிரியராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

அட்லி இயக்கத்தில் பிகிலு படத்தில் நடித்துள்ளார் விஜய். இதில் அவர் ஜோடியாக நயன் தாரா நடிக்கிறார். மற்றும் விவேக், கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி உட்பட பலர் நடித்துள்ளனர். கல்பாத்தி அகோரத்தின் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்  தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்த படம் இந்த மாதம் வெளியாக இருக்கிறது.

இதையடுத்து விஜய் நடிக்கும் படத்தை ’மாநகரம்’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இதில் விஜய் சேது பதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதிக்கும் விஜய்-க்கும் நடக்கும் மோதல்தான் படம் என்று கூறப்படுகிறது. இதற்காக, இதுவரை அவர் வாங்காத அளவு சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சாந்தனு, மாளவிகா மோக னன் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத் தில் விஜய் பேராசிரியராக நடுத்தர வயதுள்ள கேரக்டரில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close