[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது

பவுன்சர்களை காட்டி மறைமுகமாக எச்சரித்த திரையரங்கம் - ‘பிகில்’ உஷார்

ram-muthuram-theater-warning-vijay-fans-for-bigil-fdfs

‘பிகில்’ முதல் நாள் முதல் ஷோவில் ஸ்கீரின் எதேனும் ஆனால் நாங்கள் பொறுப்பல்ல என பதிவிட்ட ரசிகருக்கு, திரையரங்கம் ஒன்று அதே பாணியில் பதிலளித்துள்ளது.

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘பிகில்’. இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். நயன்தாரா படத்தின் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னை அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடத்தப்பட்டது. இதில் விஜய் பேசியது சில சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அத்துடன் விஜய் ரசிகர்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்டதும் பேசுப் பொருளானது.

இந்நிலையில் ‘பிகில்’ படம் தீபாவளியன்று திரைக்கு வருகிறது. இந்தப் படத்தின் ‘வெறித்தனம்’ பாடலை நெல்லையிலுள்ள ராம் முத்துராம் திரையரங்கம் ஒளிபரப்பியுள்ளது. அந்த வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. அதற்குப் பதிலளித்திருந்த விஜய் ரசிகர் ஒருவர், முதல் நாள் முதல் ஷோ அன்று ஸ்கீரின் பத்திரம், ஏதேனும் ஆனால் நாங்கள் பொறுப்பல்ல என்று பதிவிட்டிருந்தார்.

அதற்கு திரையரங்கம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள பதிலில், “சகோதரரே நீங்கள் அனைவரும் கொண்டாட வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம். ஆனால் நீங்கள் நகைச்சுவையாக இப்படி உரிமையாளரிடம் நேரடியாக கூறுவது நல்லதல்ல. நீங்கள் பொறுப்பற்ற முறையில் கூறினால், நானும் அதையே கூறுவேன். உங்களுக்கு ஏதேனும் ஆனால் நாங்கள் பொறுப்பல்ல. கொண்டாடும் போது கவனமாக இருங்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவுடன் திரையரங்கில் வேலை செய்யும் பவுன்சர்களின் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் விஜய் ரசிகர் தனது ட்விட்டர் பதிவை நீக்கிவிட்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close