[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தோனேசியாவைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம். 7.4 ரிக்டர் அளவில் தாக்கிய நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுப்பு
  • BREAKING-NEWS கும்பகோணத்தில்‌ பாதாளச்சாக்கடையில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
  • BREAKING-NEWS பயங்கரவாதத்தால் ஆண்டுக்கு 70 லட்சம் கோடி ரூபாய் இழப்பு: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

“விஜய் சேதுபதி மிகவும் எளிமையான நடிகர்” - சிரஞ்சீவி 

actor-siranjeevi-speaks-about-vijay-sethupathi

விஜய் சேதுபதி மிகவும் எளிமையான நடிகர் என பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி புகழ்ந்துள்ளார்.

சிரஞ்சீவி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'சைரா நரசிம்ம ரெட்டி'. இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா உள்ளிட்ட பல மொழிக் கலைஞர்கள் நடித்துள்ளனர். இப்படம் வரும் 2-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். 

அப்போது, ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தை தயாரித்துள்ள தனது மகன் ராம்சரணை சிரஞ்சீவி வெகுவாகப் புகழ்ந்தார். மகன்களுக்காக தந்தையர் படம் தயாரித்த காலம் போய், தற்போது தந்தைக்காக மகன் படம் தயாரிக்கும் காலம் வந்துள்ளது என அவர் குறிப்பிட்டார். மேலும்,  எளிமையான நடிகர் என்றால் அது விஜய் சேதுபதிதான் எனவும் சிரஞ்சீவி புகழாரம் சூட்டினார். 

‘சைரா நரசிம்ம ரெட்டி’ பட நிகழ்வில் இயக்குநர்கள் மோகன்ராஜா, லிங்குசாமி மற்றும் பாடலாசிரியர் மதன்கார்க்கி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close