அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘விஸ்வாசம்’ படத்தில் இமான் இசையமைத்திருந்த பின்னணி இசையை அப்படியே காப்பி அடிக்கப்பட்டிருக்கிறது.
‘மர்ஜவான்’ என்ற தலைப்பில் பாலிவுட் திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சிதார்த் மல்ஹொத்ரா, ரிதேஷ் தேஷ்முக், தாரா, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மிலாப் ஷவெரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு, தனிஷ்க் பாக்ஷி, மீட் சகோதரர்கள், பாயல் தேவ் ஆகியோர் இசையமைத்துள்ளனர். இந்நிலையில் படத்தின் டிரைலர் நேற்று வெளியாகியுள்ளது. இந்த டிரைலரில் ஹீரோவுக்கு வரும் மாஸ் பிஜிஎம், அப்படியே ‘விஸ்வாசம்’ படத்தில் வரும் ஓபனிங் பிஜிஎம் தான். முழுக்க முழுக்க எந்தவித மாற்றமும் இன்றி அப்படியே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்த காப்பி விஷயத்தை அஜீத் ரசிகர்கள் இசையமைப்பாளர் டி.இமானிடம் ட்விட்டர் பதிவுகள் மூலம் கொண்டு சென்றனர். இதனையடுத்து இமானும் இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் அதில் " இந்தி படம் ‘மர்ஜவான்’ படத்தில் ‘விஸ்வாசம்’ பிஜிஎம் பயன்படுத்தப்பட்டது பற்றி எதுவும் தெரியாது. தயாரிப்பு நிறுவனத்திடம் இசை காப்பீடு தொடர்பாக எந்த அறிவிப்பும் செய்யவில்லை என்னை தொடர்புகொள்ளவும் இல்லை ” என்று கூறியுள்ளார்.
சந்திரயான்-3 திட்டத்தை செயல்படுத்த கூடுதலாக ரூ.75 கோடி கேட்கும் இஸ்ரோ..!
“சிந்தனைச் சிரிப்பைக் கேட்டேன்”- ப.சிதம்பரத்தை சந்தித்த வைரமுத்து ட்வீட்
“உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ரஜினி ஆதரவில்லை”- ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை..!
டெல்லியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 35 பேர் உயிரிழப்பு
வெங்காயத்தை தொடர்ந்து உச்சத்தில் முருங்கை விலை..!
கைகொடுத்த ஃபேஸ்புக்: 12 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்தினருடன் இணைந்த சிறுமி..!
தனி மனிதராக கிராமத்தை உயர்த்தும் சுப்பிரமணி வாத்தியார்..! தந்தையாகவே கொண்டாடும் ஊர்மக்கள்..!
தெலங்கானா என்கவுன்ட்டர்: போலீசாருக்கு வாழ்த்து தெரிவித்து அஜித் ரசிகர்கள் போஸ்டர்..!
நாடாளுமன்றத்தில் வேலை! விண்ணப்பிக்க ரெடியா..?