[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

ரஜினி, கமல் அரசியலுக்கு வர வேண்டாம் - சிரஞ்சீவி பேட்டி

siranjeevi-request-to-rajini-kamal-please-don-t-come-to-politics

என்னுடைய நண்பர்கள் ரஜினி, கமல் அரசியலுக்கு வரவேண்டாம் என்பதே தன்னுடை வேண்டுகோள் என நடிகர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.

நடிகர் சிரஞ்சீவி ‘ஆனந்த விகடன்’ வார இதழுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், சைரா படம் தொடர்பாகவும், அரசியல் தொடர்பாகவும் தன்னுடைய கருத்துகளை அவர் பகிர்ந்துள்ளார். அரசியல் தொடர்பாக கூறியுள்ள சிரஞ்சீவி, “ஒன்பது வருஷ அரசியல்ல நிறையவே கத்துக்கிட்டேன். எனக்கு அரசியல் சரிப்பட்டு வராதுன்னு கொஞ்சம் லேட்டாத்தான் புரிஞ்சது. இந்த சமூககத்துக்கு ஏதாவது பண்ணணும்னு முயற்சி பண்ணிக்கிட்டே இருந்தேன். ஆனா ஒவ்வொரு முறையும் அரசியல் நன்றிகெட்ட தொழில்னு உணர்த்திக்கிட்டே இருந்துச்சு. அந்த ஒன்பது வருஷங்கள்ல அரசியல்னா என்ன, அரசியல்வாதி எப்படி இருப்பாங்க, அவங்க மனநிலை எப்படி இருக்கும்னு நல்லாத் தெரிஞ்சுகிட்டேன். தப்பே பண்ணாம நம்ம மேல குற்றம் சொல்லுவாங்க. அதை மீடியா வேற மாதிரி கொண்டுபோகும்னு அதிக மன உளைச்சலைக் கொடுத்த நாள்கள் அவை. என்னைப்போல எமோஷனலாவர்கள் உணர்ச்சிவசப்படுபவர்கள் யாரும் அரசியலுக்கு வரக்கூடாது” என்று தெரிவித்திருக்கிறார்.

அதுமட்டுமின்றி ரஜினி, கமல் அரசியல் வருகை தொடர்பாக பேசியிருக்கும் அவர், “இப்போ அரசியல்ல எல்லாமே பணம் தான். உண்மையா நல்ல அரசியல் பண்ணணும்னு வருவோம். ஆனா பண்ணமுடியாது. சினிமாவுல நான் நம்பர் ஒன் இடத்துல இருந்தேன். அதையெல்லாம் விட்டுட்டு, அரசியலுக்கு வந்தேன்னா அப்போ எவ்வளவு ஆர்வத்தோட வந்திருப்பேன்னு பாருங்க. ஆனா, என் சொந்தத் தொகுதியில என்னைத் தோற்கடிக்கக் கோடிக்கணக்குல செலவு பண்ணுனாங்க. என்னை தோற்கடிச்சாங்க. அப்போ நான் ரொம்ப நொந்துபோயிட்டேன். இதேதான் என் தம்பி பவன் கல்யாணுக்கும் நடந்தது. 

இந்த முறை கமல் ஜெயிப்பார்னு எதிர்பார்த்தேன். ஆனா, அது நடக்கலை. தோல்விகள், ஏமாற்றங்கள், அவமானங்கள்னு எல்லாத்தையும் பொறுத்துகிட்டு இருந்தால் யார் வேணாலும் அரசியலுக்கு வரலாம். முன்னாடி சொன்ன மாதிரி என்னைப்போல சென்சிட்டிவா இருக்குறவங்களுக்கு அரசியல் சரிப்படாது. கமல், ரஜினி என்னை மாதிரி இருக்கமாட்டாங்கன்னு நம்புறேன். என் நண்பர்களான ரஜினி, கமல் ரெண்டு பேருக்கும் என்னோட வேண்டுகோள் ஒண்ணுதான். அரசியல் வேண்டாம். It's Not worth it. ஆனா, இதையெல்லாம் மீறி எவ்வளவு தோல்விகள், ஏமாற்றங்கள், கெட்ட பெயர்கள் வந்தாலும் அசராமல் மக்களுக்காக ஏதாவது செஞ்சே ஆகணும்னு நினைச்சா, அரசியலுக்கு வாங்க; அரசியல்ல தைரியமா செயல்படுங்க. ஒருநாள் காலம் உங்களுக்கானதா மாறலாம்” என்று கூறியிருக்கிறார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close