[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

வருமான வரி அதிகாரி போல் பேசி, நடிகையிடம் ரூ.3 லட்சம் மோசடி!

3-held-for-cheating-actor-isha-sharvani-of-rs-3-lakh

 

வருமான வரித்துறை அதிகாரி போல பேசி, நடிகை இஷா ஷர்வானியிடம் ரூ.3 லட்சத்தை ஏமாற்றிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். 

பிரபல இந்தி நடிகை இஷா ஷர்வானி. இவர் தமிழில் ’மாற்றான்’ படத்தில் தீயே தீயே என்ற பாடலுக்கு நடனமாடியிருந்தார். விக்ரம், ஜீவா நடித்த ’டேவிட்’ படத்திலும் நடித்திருந்தார். மலையாளப் படங்களிலும் நடித்துள்ள இவர், இப்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். இவரது ஃபோனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் ஓர் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், ஆஸ்திரேலிய வருமான வரித்துறையில் இருந்து பேசுவதாகவும் வருமான வரி கணக்கில் தவறுகள் இருப்பதாகவும் அதனால் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது,

அதை தவிர்க்க வேண்டும் என்றால் ஆஸ்திரேலிய வருமான வரித்துறையின் இந்திய கிளை அதிகாரிக்கு ரூ.3 லட்சத்தை டிரான்ஸ்பர் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதை வெஸ்டன் யூனியன் மற்றும் ஆர்.ஏ.ஐ மணி டிரான்ஸ்பர் நிறுவனம் வழியாக அனுப்ப வேண்டும் என்றும் கூறியுள்ளனர். 

அவர்கள் தொடர்ந்து மிரட்டியதால் அவர்கள் கேட்ட, ரூ.3 லட்சத்தை டிரான்ஸ்பர் செய்தார், இஷா ஷர்வானி. அதன் பின்னர் ஆஸ்திரேலிய வருமான வரித்துறையில் விசாரித்தபோது, அது பொய் என்று தெரியவந்தது. இதையடுத்து ஆஸ்திரேலி யாவில் இருந்து டெல்லியில் உள்ள சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் செய்தார், நடிகை இஷா.

விசாரணையில் இறங்கிய போலீசார், வெஸ்டர்ன் யூனியன் நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட முகவரான பானுஜ் பெரி என்பவரை பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், டெல்லியை சேர்ந்த புனீத் சதா, ரிஷாப் கன்னா ஆகியோருடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களை கைது செய்தனர். 

அவர்கள், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பலரிடம், வருமான வரி அதிகாரிகள் போல நடித்து மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close