[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

நடிகர் நாகார்ஜுனா பண்ணை வீட்டில் எலும்பு கூடு: அடையாளம் தெரிந்தது

decomposed-body-found-in-farmhouse-of-telugu-actor-akkineni-nagarjuna

நடிகர் நாகார்ஜூனாவின் பண்ணை வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்பு கூடு யாருடையது என்ற அடையாளம் இப்போது தெரிந்துள்ளது.

பிரபல நடிகர் நாகார்ஜுனாவுக்கு தெலங்கானாவின் மகபூப்நகர் மாவட்டத்திலுள்ள பாப்பிரெட்டிகுடா கிராமத்தில், 50 ஏக்கர் நிலப் பரப்பில் பண்ணை வீடு உள்ளது. இங்கு விவசாய பணிகளுக்காக சென்ற ஆட்கள், ஒரு பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளதை அறிந்துள்ளனர். இதையடுத்து நாகார்ஜூனாவின் வீட்டுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் போலீசுக்கு தெரிவித்தனர்..

விரைந்து வந்த போலீசார், அங்கிருந்த பழைய ரூம் ஒன்றில் மனித எலும்புக் கூடு கிடப்பதை கண்டுபிடித்தனர். அதை கைப்பற்றிய அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. 

அங்கு கிடந்த ஆதார் கார்டை வைத்து, அது பாப்பிரெட்டிகுடா கிராமத்தைச் சேர்ந்த சக்காலி பாண்டு (30) என்பவரது உடல் என்று தெரிய வந்தது. அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு வீட்டை விட்டு சென்றுவிட்டதாகவும் சகோதரரின் இறப்பு காரணமாக கவலையில் இருந்த அவர், கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டதாக வும் அவரது பெற்றோர் தெரிவித்த னர். ஆனால், எங்கு தற்கொலை செய்தார் என்ற விவரம் தங்களுக்கு தெரியாது என்றும் போலீஸில் புகார் அளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close