[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி
  • BREAKING-NEWS தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS குழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS 2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்

பிரபல மலையாள நடிகர் சத்தார் மரணம்

veteran-actor-sathar-passes-away

பிரபல மலையாள நடிகர் சத்தார் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 67.

1976 ஆம் ஆண்டு ’அனவரணம்’ என்ற மலையாள படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் சத்தார். தொடர்ந்து வில்லனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்துவந்தார். தமிழில் மயில், சவுந்தர்யமே வருக ஆகிய படங்களில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். மலையாளம், தமிழ், தெலுங்கு உட்பட சுமார் 300 படங்களில் நடித்துள்ள அவர், சில மலையாள படங்களையும் தயாரித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த சத்தார் அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை மரணமடைந்தார். அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை கேரள மாநிலம் கொடுங்கல்லூரில் நடக்கிறது.
மறைந்த சத்தார், 1979 ஆம் ஆண்டு நடிகை ஜெயபாரதியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இவர்களுக்கு கிரிஷ் ஜே.சத்தார் என்ற மகன் உள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close