[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை

பிரபல மலையாள நடிகர் சத்தார் மரணம்

veteran-actor-sathar-passes-away

பிரபல மலையாள நடிகர் சத்தார் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 67.

1976 ஆம் ஆண்டு ’அனவரணம்’ என்ற மலையாள படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் சத்தார். தொடர்ந்து வில்லனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்துவந்தார். தமிழில் மயில், சவுந்தர்யமே வருக ஆகிய படங்களில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். மலையாளம், தமிழ், தெலுங்கு உட்பட சுமார் 300 படங்களில் நடித்துள்ள அவர், சில மலையாள படங்களையும் தயாரித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த சத்தார் அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை மரணமடைந்தார். அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை கேரள மாநிலம் கொடுங்கல்லூரில் நடக்கிறது.
மறைந்த சத்தார், 1979 ஆம் ஆண்டு நடிகை ஜெயபாரதியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இவர்களுக்கு கிரிஷ் ஜே.சத்தார் என்ற மகன் உள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close