[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்
  • BREAKING-NEWS விண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்

நயன்தாராவுடன் இணைகிறார் ’ஸ்கேர்டு கேம்ஸ்’ நடிகர்

nayanthara-to-share-screen-space-with-luke-kenny

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் படத்தில் ’ஸ்கேர்டு கேம்ஸ்’ வெப் சீரியஸ் நடிகர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இயக்குனர் விக்னேஷ் சிவன் சொந்தமாகப் படம் தயாரிக்கிறார். இதற்காக ’ரவுடி பிக்சர்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இதன் மூலம் அவர் தயாரிக்கும் படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். சித்தார்த், ஆண்ட்ரியா நடித்த ’அவள்’ என்ற ஹாரார் படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்குகிறார். 

த்ரில்லர் படமான இதில், நாய் ஒன்று முக்கிய வேடத்தில் நடிக்கிறது. இந்தப் படத்தில்  இந்தி நடிகர் லூக் கென்னி முக்கிய வேடத்தில் நடிப்பதாக தெரிய வந்துள்ளது. இவர் பாலிவுட் வெப் சீரிஸான, ’ஸ்கேர்டு கேம்ஸ்’-ல் நடித்தவர். சில இந்தி படங்களிலும் நடித்துள்ளார். படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close