[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS திருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது!
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்
  • BREAKING-NEWS “மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை
  • BREAKING-NEWS நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு

விக்னேஷ் சிவனின் ’ரவுடி பிக்சர்ஸ்’ தயாரிப்பில் நயன்தாரா

director-vignesh-shivan-to-produce-nayanthara-s-movie

இயக்குனர் விக்னேஷ் சிவன் சொந்தமாகத் தயாரிக்கும் படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார்.

தமிழ் சினிமா நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி படம் தயாரித்து வருகி றார்கள். சூர்யா, தனுஷில் இருந்து விதார்த் வரை இந்த லிஸ்ட் நீள்கிறது. 

இயக்குனர்களில் லிங்குசாமி, திருப்பதி பிரதர்ஸ் என்ற நிறுவனத்தை வைத்திருக்கிறார். கவுதம் வாசுதேவ் மேனன், போட்டோன் கதாஸ் நிறுவனத்தையும் சசிகுமார் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ், பிரபு சாலமன் ஷாலோம் ஸ்டூடியோஸ், பாண்டிராஜ் பசங்க புரொடக்‌ஷன்ஸ், சுசீந்திரன் நல்லுசாமி பிக்சர்ஸ் என சொந்தப் பட நிறுவனங்களை தொடங்கி படங் களை தயாரித்து இயக்கி வருகின்றனர். மேலும் பல இயக்குனர்கள் தங்கள் சொந்த நிறுவனம் மூலம் படம் தயாரித்து வருகின்றனர்.

மற்ற இயக்குனர்களுக்கும் படம் இயக்க வாய்ப்பளித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் இப்போது இணைந்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். இவர், தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு ’ரவுடி பிக்சர்ஸ்’ என்று டைட்டில் வைத்துள்ளார். அவர் இயக்கிய ’நானும் ரவுடிதான்’ ஹிட்டானதால் இந்தப் பெயரை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.  

இந்த நிறுவனம் மூலம் அவர் தயாரிக்கும் படத்தை அறிமுக இயக்குனர் இயக்குகிறார். நயன்தாரா ஹீரோயின். மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இன்னும் முடிவாகவில்லை. விரைவில், படம் பற்றிய அறிவிப்பு வெளியாக இருக்கிறது. 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close