[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

காரை சேதப்படுத்தியதாக கன்னட நடிகர் மீது சரமாரி தாக்குதல்!

kannada-actor-huccha-venkat-was-thrashed-by-a-mob

காரை, சேதப்படுத்தியதாக கன்னட நடிகர் ஹுச்சா வெங்கட்டை, பொதுமக்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னட நடிகர் ஹூச்சா வெங்கட். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பல்கலை வித்தகர். அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் இவர், நடிகை ஒருவர் தன்னை காதலிக்கவில்லை என்பதற்காக தற்கொலைக்கு முயன்று பரபரப்பை ஏற்படுத்தியவர். இவர் நேற்று குடகுக்கு சென்றிருந்தார்.

அங்கு சாலையில் நின்றிருந்த கார் ஒன்றை அவர் திடீரென்று கதவை இழுத்தும் கல்லால் எறிந்தும் தாக்கினார். இதையடுத்து அங்கு கூடியிருந்தவர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் சிலர் திடீரென்று சரமாரியாகத் தாக்கினர். 

இது தொடர்பாக போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் விரைந்து வந்து வெங்கட்டை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெங்கட் தாக்கப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close