[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

’தல 60’-ல் அஜீத்துக்கு வில்லனாகிறார் அஜய்தேவ்கன்?

ajay-devgn-to-play-antagonist-in-ajith-s-thala-60

அஜீத்தின் 60 வது படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க, பிரபல இந்தி ஹீரோ அஜய்தேவ்கனிடம் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.

‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்குப் பிறகு அடுத்தப் படத்துக்கு ரெடியாகி விட்டார் அஜீத். ’தல 60’ என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ’நேர்கொண்ட பார்வை’யை இயக்கிய ஹெச்.வினோத் இயக்குகிறார். அந்தப் படத்தை தயாரித்த, போனி கபூர், ஜீ ஸ்டூடியோஸூடன் இணைந்து தயாரிக்கிறார். இதன் ஷூட்டிங் நவம்பரில் தொடங்குகிறது. பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட இருக்கிறது. அடுத்த வருடம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. 

இந்தப் படத்தில் அஜீத்துக்கு வில்லனாக பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. தயாரிப் பாளர் போனி கபூர் அவரிடம் பேசிவருவதாகவும் ஆனால் அஜய்தேவ்கன் தரப்பில் இன்னும் பதிலளிக்கவில்லை என்றும் தெரிகிறது.

கமலின் ’இந்தியன் 2’ படத்தில் வில்லனாக நடிக்க அஜய்தேவ்கனிடம் கேட்டபோது மறுத்துவிட்டார். அதே நேரம் ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் தேஜா நடிக்கும் ’ஆர்ஆர்ஆர்’ படத்தில் அவர் நடித்து வருகிறார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close