[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது அதிமுக
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னை ஐஐடியில் மாணவர்களின் தற்கொலைகள் குறித்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
  • BREAKING-NEWS ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி புகார் மனு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தெர்தலில் மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன் மத்திய நிதி அமைச்சக செயலாளராக நியமனம்

பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றதால் கிளைமாக்சை மாற்றிய நடிகர்!

this-win-gives-a-perfect-climax-for-sindhu-biopic-sonu-sood

பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து, சாம்பியன் பட்டம் வென்றதால், படத்தின் கிளைமாக்சை மாற்றியுள்ளதாக நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்துவின் வாழ்க்கைக் கதை சினிமாவாகிறது. தமிழில் அருந்ததி, ஒஸ்தி, தேவி உட்பட பல்வேறு படங்களில் வில்லனாக நடித்த, இந்தி நடிகர் சோனு சூட் தயாரிக்கிறார். முன்னாள் பேட்மின்டன் வீரர் கோபிசந்த் ஆகவும் அவர், அதில் நடிக்கிறார். படத்துக்கு ’சிந்து’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதில் தீபிகா படுகோன், சிந்துவாக நடிப்பார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் பி.வி சிந்து உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டன் போட்டியில், சாம்பியன் படம் வென்றுள்ளதால் படத்துக்கு புதிய கிளைமாக்ஸ் கிடைத்துள்ளது நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது, ‘’இந்த வெற்றியை எதிர்பார்த்தேன். ஏற்கனவே சிந்துவின் வாழ்க்கை கதையின் ஸ்கிரிப்டை முடித்து விட்டோம். இந்த வெற்றியின் மூலம் எங்களுக்கு புது கிளைமாக்ஸ் கிடைத்திருக்கிறது. ஏற்கனவே வைத்திருந்த கிளை மாக்சை மாற்றி, புது கிளைமாக்ஸ் வைக்க இருக்கிறோம். இந்த படத்தில் கோபிசந்த்-ஆக நடிப்பதற்கு பயிற்சிப் பெற்று வரு கிறேன். எப்போதுமே, விளையாட்டு வீரர்கள் பற்றிய பயோபிக் சவால் நிறைந்ததுதான். இந்தப் படமும் அப்படித்தான் இருக்கும். ஆனால் சிறந்த படமாக இருக்கும். கடந்த 2 வருடமாக இந்தக் கதையோடு வாழ்ந்து வருகிறேன்’’ என்றார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close