[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

“உயர்நீதிமன்றத்தில் ‘பிகில்’ குறித்து வழக்கு தொடர்வேன்” - உதவி இயக்குநர் 

i-will-approach-high-court-on-bigil-case-says-assistant-director

‘பிகில்’ திரைப்படத்தின்‌ கதைக்கு உரிமைகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாக உதவி இயக்குநர் செல்வா தெரிவித்துள்ளார்.

‘தெறி’,‘மெர்சல்’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் அட்லீயுடன் விஜய் மூன்றாவது முறையாக கைகோர்த்துள்ள படம் ‘பிகில்’. ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கால்பந்து பயிற்சியாளராக விஜய் நடிக்கும் இப்படத்தில் நயன்தாரா, நடிகர் விவேக், டேனியல் பாலாஜி, யோகி பாபு, கதிர், பாலிவுட் நடிகர் ஜாக்கி செஷாஃப்  உள்பட பலர் நடித்துள்ளனர். 95 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் டப்பிங் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்தப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகிறது. 

முன்னதாக ‘பிகில்’ திரைப்படத்தின் கதை தன்னுடையது எனக்கூறி உதவி இயக்குனர் S.P. செல்வா என்பவர் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இது தொடர்பான விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது அந்த வழக்கை செல்வா திரும்பப்‌ பெற்றுள்ளார். இது குறித்து பேசிய செல்வா, சென்னை உயர்நீதிமன்றத்தில் ‌வழக்குத் தொடர போவதாகவும், அதனாலே சிட்டி ‌சிவில் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை திரும்பப் பெற்றுள்ளதாகவும்‌ தெரிவித்துள்ளார். 

மேலும் ''வழக்கை வாபஸ் பெற்றதை பிகில் படக் குழுவினர் தவறாக விளம்பரப்படுத்துகின்றனர். நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன்'' எனவும் தெரிவித்துள்ளார்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close