[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விருதுநகர் அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம் விடப்படுவதை தடுத்த இளைஞர் அடித்துக்கொலை: 7 பேர் கைது
  • BREAKING-NEWS குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் நீடிக்கிறது வன்முறை
  • BREAKING-NEWS சிறார்களின் ஆபாச வீடியோக்களை முகநூலில் பதிவேற்றம் செய்த ஏசி மெக்கானிக் திருச்சியில் கைது
  • BREAKING-NEWS தெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரத்தில் நீதி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

’இந்தியன் 2’ -ல் இருந்து வெளியேறினார் ஐஸ்வர்யா ராஜேஷ்!

aishwarya-rajesh-opts-out-of-indian-2

கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படத்தில் இருந்து விலகி விட்டதாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம், 'இந்தியன் 2'. இதன் ஷூட்டிங் இப்போது நடந்து வருகிறது. கமல் ஜோடியாக, காஜல் அகர்வால் நடிக்கிறார். மற்றும் ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, வித்யூத் ஜாம்வால், விவேக் உட்பட பலர் நடிக்கின்றனர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. 

இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடிப்பதாக இருந்தது. இந்நிலையில் அவர் படத்தில் இருந்து விலகியுள்ளார். இந்தப் படத்தின் ஷூட்டிங் முன்பே தொடங்க வேண்டியிருந்தது. ஆனால் ஷூட்டிங் தள்ளிப்போனதால் கால்ஷீட் பிரச்னை காரணமாக அவர் படத்தில் இருந்து விலகியுள்ளார்.

இதுபற்றி ஐஸ்வர்யா ராஜேஷிடம் கேட்டபோது, ‘’இந்தியன் 2 படத்தில் இருந்து விலகியது உண்மைதான். மற்ற படங்க ளுக்கு கொடுத்திருந்த கால்ஷீட்டை இந்தப் படத்துக்காக மாற்ற முடியவில்லை. அதனால் பரஸ்பரம் சுமூகமாகப் பேசி வெளியேறிவிட்டேன். நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர் படங்களில் நடிக்க முடியாதது வருத்தமளிக்கிறது. இது எனது கனவு படமும் கூட. அவர்களுடன் இணைந்து நடிக்க, மீண்டும் வாய்ப்புக் கிடைக்கும் என்று நம்புகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close