கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படத்தில் இருந்து விலகி விட்டதாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம், 'இந்தியன் 2'. இதன் ஷூட்டிங் இப்போது நடந்து வருகிறது. கமல் ஜோடியாக, காஜல் அகர்வால் நடிக்கிறார். மற்றும் ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, வித்யூத் ஜாம்வால், விவேக் உட்பட பலர் நடிக்கின்றனர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.
இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடிப்பதாக இருந்தது. இந்நிலையில் அவர் படத்தில் இருந்து விலகியுள்ளார். இந்தப் படத்தின் ஷூட்டிங் முன்பே தொடங்க வேண்டியிருந்தது. ஆனால் ஷூட்டிங் தள்ளிப்போனதால் கால்ஷீட் பிரச்னை காரணமாக அவர் படத்தில் இருந்து விலகியுள்ளார்.
இதுபற்றி ஐஸ்வர்யா ராஜேஷிடம் கேட்டபோது, ‘’இந்தியன் 2 படத்தில் இருந்து விலகியது உண்மைதான். மற்ற படங்க ளுக்கு கொடுத்திருந்த கால்ஷீட்டை இந்தப் படத்துக்காக மாற்ற முடியவில்லை. அதனால் பரஸ்பரம் சுமூகமாகப் பேசி வெளியேறிவிட்டேன். நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர் படங்களில் நடிக்க முடியாதது வருத்தமளிக்கிறது. இது எனது கனவு படமும் கூட. அவர்களுடன் இணைந்து நடிக்க, மீண்டும் வாய்ப்புக் கிடைக்கும் என்று நம்புகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு ஆலோசகராக விஜயகுமார் நியமனம்
“பருவநிலை மாற்றங்களால் பறவைகளின் உடலமைப்பில் மாற்றம்”-ஆய்வில் தகவல்
“போலீஸ் செய்தது சரியே.. ஆனாலும்...?: தெலங்கானாவில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டவர்களின் குடும்பம்..!
ஆளுநர் பதவியா..? அதிபர் கோத்தபய ராஜபக்சவை ஆதரிப்பது ஏன்..? - முத்தையா முரளிதரன் பேட்டி
உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய தேதி விரைவில் வெளியிடப்படும்: மாநில தேர்தல் ஆணையர்..!