[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் மூன்று குழந்தைகளை கொலை செய்து தந்தையும், தாயும் தற்கொலை
  • BREAKING-NEWS குடியரசுத் தலைவரின் ஒப்புதலையடுத்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அமலுக்கு வந்தது

புகாரை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வேன் - நடிகை மதுமிதா

channel-files-case-against-bigg-boss-3-tamil-s-eliminated-contestant-madhumitha

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேற்றப்பட்ட நடிகை மதுமிதா, தற்கொலை மிரட்டல் விடுவதாக, தொடர்புடை‌ய தொலைக்காட்சி நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதை சட்டப்பூர்வமாக எதிர்க்கொள்ளவிருப்பதாக மதுமிதா தெரிவித்துள்ளார்.

சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் மற்றொரு சர்ச்சையை தொடங்கி வைத்திருக்கிறார் நடிகை மதுமிதா. நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேற்றப்பட்ட மதுமிதா தான் புதிய பிரச்னைக்கு காரணம். ஓகே.ஒகே, ராஜா ராணி, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பால குமாரா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் மதுமிதா.

இவர் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3ஆவது சீசனில் கலந்து கொண்டார். சக போட்டியாளர்களுடன் ஏற்பட்ட பிரச்னையில் மனமுடைந்த மதுமிதா, பிக் பாஸ் வீட்டில் கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. போட்டி விதிகளை மீறியதாக கூறி பிக் பாஸ் வீட்டில் இருந்து அவர் அதிரடியாக வெளியேற்றப்பட்டார். போட்டியின் 50ஆவது நாளில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அதை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு புதிய விவகாரம் ஒன்று விஸ்வரூபமெடுத்திருக்கிறது. தொலைக்காட்சி நிர்வாகத்தின் சட்டப்பிரிவு மேலாளர் பிரசாத் என்பவர் நடிகை மதுமிதா மீது கிண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

ஒப்பந்தத்தின்படி, நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, மதுமிதா 11.5 லட்சம் ரூபாய் பணம் பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். போட்டியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்ட நிலையில், நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம் ரூபாய் வீதம் எஞ்சிய தொகையை விரைவில் தருவதாக அவருக்கு தொலைக்காட்சி நிர்வாகம் உறுதியளித்துள்ளது. முதலில் அதை ஏற்றுக்கொண்ட அவர், கடந்த 19ஆம் தேதி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருக்கு வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியதாக கூறப்பட்டுள்ளது. நீங்கள் பணம் தரும் வரை எல்லாம் காத்திருக்க முடியாது, 2 நாட்களுக்குள் சம்பள பாக்கியை தராவிட்டால் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மதுமிதா மிரட்டல் விடுத்திருப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நடிகை மதுமிதாவிடம், புகார் தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டது. தனக்கு தரவேண்டிய சம்பள பாக்கியை தொலைக்காட்சி நிர்வாகம் தரவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளார். புகாரை சட்டரீதியாக எதிர்கொள்ளப்போவதாகவும் அவர் கூறியுள்ளார். மகளை கடத்திய புகாரில் நடிகை வனிதா விஜயகுமார், பெண்களை பேருந்தில் உரசியதாக கூறிய நடிகர் சரவணன், மோசடி புகார் தொடர்பாக மாடல் அழகி மீரா மிதுன் ஆகியோரால், பிக் பாஸ் வீட்டில் ஏற்கனவே ஏற்பட்ட சர்ச்சைகளோடு தற்போது மற்றுமொரு சர்ச்சை அரங்கேறியிருக்கிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close